
இன்றைக்கு இருக்கிற இளைஞர்கள் எல்லோருக்குமே mostly வைட்டமின் D மற்றும் வைட்டமின் B12 குறைபாடுகள் இருக்கின்றன. வாலிப வயதுள்ள ஆண் பெண் இருபாலருக்கும் இந்த வைட்டமின் D மற்றும் வைட்டமின் B12 பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது. இந்த இரண்டு வைட்டமின்களுமே மிகவும் இன்றியமையாதது ஆகும்.
இன்றைய காலகட்டத்தில் ஆண்களும் சரி பெண்களும் சரி, உட்கார்ந்தபடி தான் ஆபீஸில் வேலை செய்கிறார்கள். முக்கால் வாசி இளைஞர்கள்/இளைஞிகள் IT field ல் வேலை செய்கிறார்கள். சிலர் தன்னுடைய ஊரிலியே வேலை செய்கிறார்கள். சிலர் வெளியூரிலோ அல்லது வெளி நாட்டிலோ தங்கி வேலை செய்கிறார்கள்.
ஆனால், பாதிப்பு இரண்டு தரப்பினருக்குமே இருக்கிறது. அதாவது வீட்டில் இருந்தாலும் சரி, வெளியே தங்கினாலும் சரி எல்லோருமே இந்த பாதிப்பிற்கு ஆளாகுகிறார்கள். ஏன் வருகிறது என்ன காரணம் என்பதை பார்க்கலாமா?
இளவயதினருக்குத் தான் இப்போது heart attack அதிகமாக வருகிறது. heart attackக்கு எது காரணம் என்று உங்களுக்குத் தெரியுமா?
இந்த மாரடைப்புக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதில் மிக முக்கியமான ஒன்று obesity ஆகும். இந்த எடை அதிகரிப்பிற்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்தால் முக்கால் வாசி பேருக்கு B 12 மிகக் குறைவாக இருக்கும். B 12 குறைவாக இருந்தாலே அஜீரணக் கோளாறு, தூக்கமின்மை, அசிடிட்டி போன்ற பிரச்சினைகள் வரும். கூடவே உடல் பருமனாகிக் கொண்டே போகும்.
பெண்களுக்கு மாதவிடாய் மாதந்தோறும் வருவதில் பிரச்சினைகள் ஏற்படும். PCOD, thyroid போன்ற பிரச்சினைகளும் வரும். அது மட்டுமில்லாமல் ஈறுகளில் இரத்த கசிவு வரும்.
இவை எல்லாம் வைட்டமின் B 12 குறைபாடு இருந்தால் வரும். சரி வைட்டமின் D குறைந்தால் என்ன பிரச்சினை வரும் தெரியுமா??
உடல் சோர்வாகவே இருக்கும். கை கால் ரொம்ப வலிக்கும். எலும்புகள் வலுவாகவே இருக்காது. சிறிய விபத்து ஏற்பட்டால் எலும்பு முறிவு ஏற்படும். சிறிய வயதிலியே arthritis பிரச்சினையை சந்திக்க நேரிடும்.
சரி, என்ன symptoms, என்ன பாதிப்பு இதைப் பற்றி பார்த்தோம். ஏன் வருகிறது அதற்கு என்ன தீர்வு?
வைட்டமின் D க்கு செய்ய வேண்டியவை:
இந்தியாவில் இந்த வைட்டமின் D இப்போது தலை விரித்து ஆடுகிறது. முன்பெல்லாம் இந்த குறைபாடு வயதானவர்களுக்கும் மெனோபாஸ் நிலையை அடைந்த பெண்களுக்கும் தான் வரும். ஆனால், இப்போது சர்வ சாதாரணமாகி விட்டது. வைட்டமின் D நமக்கு இயற்கையாக சூரிய ஒளியிலிருந்து நேரடியாக கிடைக்க கூடிய ஒன்றாகும். ஆனால், இப்போதெல்லாம் இளைஞர்கள் குழந்தைகள் என அனைவருமே AC ரூமில் தான் இருக்கிறார்கள்.
கண்ணாடி போட்ட ஜன்னல் தான் எங்கு பார்த்தாலும் இருக்கின்றன. சூரிய ஒளி உள்ளே வருவதற்கான வசதியே இருப்பதில்லை. இது ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் வெயிலில் யாரும் நடப்பது கூட கிடையாது. எதற்கெடுத்தாலும் வாகனம்.
கண்ணுங்களா... நீங்க தினமும் ஆபீஸிற்கு cab ல் அல்லது ஸ்கூட்டரில் தான் செல்கிறீர்கள். வேறு வழியில்லை.. ஆனால் லீவு நாட்களில் வீட்டிற்கு தேவையான பொருட்களையோ அல்லது வேறு ஏதாவது வாங்க குறைந்தபட்ச தூரம் உள்ள இடங்களுக்கு சிறிது வெயில் இருக்கும் நேரத்தில் அதாவது நண்பகல் தொடங்குவதற்கு முன்னால் நடந்து சென்று வரலாமே?
அதைப் போல சில பேர் டாக்டர் வாக்கிங் போகச் சொன்னார் என்று காலையில் சூரிய உதயத்திற்கு முன்னாலேயே சென்று திரும்பி விடுகிறார்கள். அதில் என்ன லாபம்? சூரிய ஒளி தேவை என்று தானே வாக்கிங் செல்கிறோம். 6 மணிக்கு சென்றால் மிதமான சூரிய ஒளி நமக்கு கிடைக்குமே!
அதைப் போல சாயங்காலமும் சூரிய அஸ்தமத்திற்கு முன்னால் சென்றால் மிகவும் பயனளிக்கும். வைட்டமின் D பெறுவதற்கான சிறந்த வழி சூரிய ஒளி தான். கொஞ்சம் கிடைத்தாலே போதும்.
உங்களுக்கு vitamin D குறைபாட்டிற்கான symptoms தெரிந்தால், மருத்துவரை அணுகி இரத்த பரிசோதனை செய்து கொண்டு டாக்டரின் ஆலோசனைப் படி மருந்துகளை எடுத்து கொள்ளவும். அதைத் தவிர தினமும் சிறிது நேரம் சூரிய ஒளிப் படும் படி நடக்கவும்.
வைட்டமின் B 12 க்கு செய்ய வேண்டியவை:
வைட்டமின் B12 deficiency symptoms சில பேருக்கு தெரியும். சில பேருக்கு தெரியவே தெரியாது. ஆகவே மூன்று மாதத்திற்கு ஒருமுறை regular ஆக இரத்த பரிசோதனை செய்வது நல்லது. ஏனென்றால், B12 ரொம்ப குறைந்து விட்டால் சிறு வயதிலேயே neuro சம்பந்தபட்ட பிரச்சினைகளும், உடல் பருமனும் உண்டாகும். அப்படி உங்களுக்கு பாதிப்பு இருந்தால் டாக்டர் கொடுக்கும் மருந்துகளை சரிவர எடுத்து கொள்ள வேண்டும். இதைத் தவிர சரியான சத்தான ஆகாரத்தை டாக்டரின் ஆலோசனைப் படி உண்ண வேண்டும். இரவு நேரத்தில் தாமதம் செய்யாமல் சீக்கிரம் தூங்கி விட வேண்டும்.
வெளியூரில் தங்கி வேலை செய்யும் இளைஞர்களே, உங்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுக்கு வேளைக்கு சமையல் செய்து கொடுக்க ஆள் இல்லாமல் இருக்கலாம். ஆகவே, தினமும் வாங்கி சாப்பிடும் நிர்ப்பந்தம் இருக்கும். பரவாயில்லை வாங்கி சாப்பிடு, ஓட்டலில் போய் கூட சாப்பிடுங்கள். ஆனால் முடிந்த வரை pizza, burger முதலியவற்றை தவிர்க்கவும்.
பெரிய பைவ் ஸ்டார் ஓட்டலுக்கு போகமல் சின்ன ஓட்டலுக்கு போய் வயிறு நிறைய சாப்பிடுங்கள். ஏனென்றால், சின்ன சின்ன ஓட்டல்களில் தான் வீடு மாதிரி அன்றாடம் அப்பப்ப செய்வார்கள். Preservative போட மாட்டார்கள். விலையும் மலிவு, தரமும் உயர்வு.
வேளைக்கு ஒழுங்காக சாதாரண சாப்பாட்டை சைவமோ அல்லது அசைவமோ அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற் போல் சாப்பிட்டாலே போதும். பழங்களை வாங்கி சாப்பிடுங்கள். பால், மீன், பனீர் போன்றவற்றை தவறாமல் உணவில் எடுத்து கொள்ளுங்கள். நினைவில் வைத்து கொள்ளுங்கள். ஆரோக்கியம் தான் முதலில் நமக்கு முக்கியம்.