நாம் அதிகபட்சமாக செருப்பு இல்லாமல் இருப்பது தூங்கும் போது மட்டுமே. பலரும் செருப்பு போட்டுக்கொண்டால்தான் நோய்கள் நம்மை தீண்டாது என்னும் தவறான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள். அதன் காரணமாக அதிகம் நபர்கள் செருப்புகள் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதே இல்லை.
பொதுவாக வெறும் காலில் நடந்தோம் என்றால் அது நமக்கு நல்ல சக்திகளை தருகிறது என்று மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன. வெறும் காலில் நடப்பதால் உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் கிடைக்கிறது.
அதிகமாக நாம் மண், புல், மணல் பரப்பு மேல் நடப்பதால் பூமிக்கும் நமக்கும் இருக்கும் எலக்ட்ரான் உறவு பாலமாக அமைகிறது என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள். நமது பூமிக்கு இயற்கையாக சக்தி இருக்கிறது. அதன் நேரடித் தொடர்புகள் நம் உடலுக்கு பல நன்மைகள் செய்கின்றன. பல்வேறு உடல் நோய்களிலிருந்து நம்மை காப்பாற்றுகின்றன.
பூமியில் இருக்ககூடிய எலக்ட்ரான் எப்படி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்று ஆய்வு அறிஞர்கள் சொல்கிறார்கள். அந்த ஆய்வில் மூளை சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு வெறும் காலில் நடக்கவைத்து ஆய்வு செய்ததில் நிறைய மாற்றங்களை கண்டறிந்தார்கள். மேலும் ஆய்வு செய்ததில் வெறும் காலில் நடப்பதால் சரும பராமரிப்பு திறன், மிதமான இதயத்துடிப்பு, மேம்படுத்தப்பட்ட குளுக்கோஸ் கட்டுப்பாடு, மன அழுத்தம் குறைதல், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல் என்று அந்த ஆராய்ச்சியில் பல நல்ல பயன்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.
அதுமட்டுமில்லாமல் இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் கண்டறியப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இரத்தத்தில் உள்ள பாகும் தன்மை குறைகிறது. பாகு தன்மை அதிகமாக இருந்தால், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வெறும் காலில் நடப்பது அந்த நோயிலிருந்து நம்மைத் தடுக்கிறது. காலணிகள் அணியாமல் நடந்தால் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்படாது என்றும் ஓர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெறும் காலில் நடைபயிற்சியை ஒரு நாளுக்கு அரை மணி (1/2) நேரம் மேற்கொள்வதால் புற்றுநோய்களுடைய ஆபத்தை குறைக்க முடிகிறது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அதிக எடை, நீரிழிவு பிரச்சனைகளுக்கும் வெறுங்காலில் நடத்தல் நமக்கு பெரிதும் உதவுகிறது. வெறுங்காலில் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகுதல், உடலில் உள்ள நச்சு நீங்குதல் போன்ற நன்மைகளும் நமக்கு கிடைக்கின்றன.
ஆனால் நாம் நடக்கும் தரைப்பரப்பு சமதளமாகவும், முட்கள் போன்ற கூரான கருவிகள் இல்லாததையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் நடக்கும் தரைப்பரப்பு வழுக்குவதாகவோ, சறுக்குவதோகவே இல்லாமல் இருப்பதும் மிக அவசியம்.