
உடற்பயிற்சி என்றவுடன் நம் அனைவர் மனதிலும் முதலில் வருவது நடைப்பயிற்சி தான். அத்தகைய நடைப்பயிற்சி எடை மேலாண்மை, இதய ஆரோக்கியம் மற்றும் சிறப்பான மனநிலை உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இவ்வளவு சிறந்த எளிய பயனுள்ள நடைப்பயிற்சி மேற்கொள்ள கூடாத 5 பேர் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. முழங்கால், கணுக்கால் மற்றும் இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள்
முழங்கால், கணுக்கால் மற்றும் இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் போது மூட்டுகளில் அழுத்தம் அதிகரிக்கும். இதனால் வலி மற்றும் வீக்கம் அதிகரித்து பிரச்னையை உண்டாக்கும் என்பதால் நடைப்பயிற்சியை கவனமாக பரிசீலிக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.
2. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள்
முறையான அணுகுமுறை உடற்பயிற்சிக்கு தேவையாக இருக்கிறது. எனவே உயர் ரத்த அழுத்தம் , மாரடைப்பு வரலாறு உள்ளிட்ட இதயம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்களுக்கு நீண்ட நடைப்பயணம் ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றும் என்பதால், இவர்கள் சுகாதார நிபுணருடன் கலந்தாலோசித்து நடைப்பயிற்சி மேற்கொள்வதே சிறந்தது.
3. சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள்
ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாசப் பிரச்சனைகள் உள்ளவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது அதாவது குளிர்ந்த மற்றும் மாசுப்பட்ட காற்று போன்ற பாதகமான சூழ்நிலைகளில் அவர்களின் அறிகுறியை மோசமாக்கும் என்பதால், குறுகிய மற்றும் நிர்வகிக்கக்கூடிய நடைப்பயிற்சியே சிறந்த மாற்றாக இருக்கும் .
4. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்
நீரிழிவு நோயாளிகள் நடைப்பயணங்கள் மேற்கொள்ளும் போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென குறைவதற்கு வாய்ப்பு இருப்பதால் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில், ரத்த அளவு குறையும்போது தலைசுற்றல் மற்றும் மயக்கம் ஏற்படும் என்பதால் நீரிழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரையை உன்னிப்பாக கவனிப்பதோடு அதற்கேற்ப செயல்பாடுகளை வைத்துக் கொள்வதே முக்கியம்.
5. அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள்
அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வரும் நபர்கள் அவர்கள் மறுவாழ்வில் ஒரு பகுதியாக நடைப்பயிற்சியை படிப்படியாக அறிமுகப்படுத்துவது பாதுகாப்பான மற்றும் பயனுள்ள மீட்பு முறையை உறுதி செய்யும் என்பதால் மருத்துவரின் ஆலோசனைப்படி நடைப்பயிற்சி மேற்கொள்வதே அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு நல்லது.
நடைப்பயிற்சி பலருக்கு நன்மை அளித்தாலும், மேற்கூறிய 5 நபர்களும் கவனத்துடன் நடைப்பயிற்சி மேற்கொள்வதே அவர்கள் ஆரோக்கியமான வாழ்விற்கு சிறந்தது.