கோடைக்கு ஏற்ற பழம் எது என்று கேட்டால் 'பளிச்சென்று' நினைவுக்கு வருவது தர்பூசணிதான். இது 1 கிலோ முதல் 12 கிலோ வரை வெவ்வேறு எடைகளில் கிடைக்கிறது. இதன் சிவந்த சதைப்பகுதி இனிப்பானது. அதோடு தாகம் தணிக்கும், பசி போக்கும், வயிற்றுப் பொருமல் குறைக்கும், பித்தசூட்டை போக்கும். ஜூஸாக குடித்தால் வயிற்று எரிச்சல், அடி வயிற்றுக் கோளாறுகளையும் உடனடியாக சரி செய்யும்.
தர்பூசணிக்கு தண்ணீர் பழம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. சூட்டை தணிக்கும் சிறந்த அதிக நீர் சத்துக்கொண்ட பழம் இது. 94 சதவீதம் தண்ணீர் இருப்பதால் வெயிலுக்கு ஏற்ற பழம். இதில் இருக்கும் மற்றொரு சிறப்பம்சங்கள் பொட்டாசியம், விட்டமின் எ மற்றும் சி. புரோட்டீன், கொழுப்பு, கார்போஹைடிரேட், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, நியாசின், வைட்டமின் பி12, வைட்டமின் ஈ போன்றவைகள் உள்ளது. மேலும் இதில் எந்த வித கலோரிகளும் இல்லாததால் இதயத்திற்கும், கண்களுக்கும் நல்லது.
சிறுநீரகத்தை நச்சு நீக்குவதில் தர்பூசணி மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. தர்பூசணியில் நீர்ச்சத்து நிறைந்துள்ளதே இதற்கு காரணம். சிறுநீரக பாதிப்புகளின் அபாயத்தைக் குறைப்பதில் இந்த தர்பூசணி நிபுணத்துவம் வாய்ந்தது. தர்பூசணியில் உள்ள லைகோபீன் கலவை சிறுநீரக வீக்கத்தை குறைக்க உதவுகிறது. தர்பூசணி சிறுநீரகத்தில் பாஸ்பேட், ஆக்சலேட், சிட்ரேட் மற்றும் கால்சியம் ஆகியவற்றை சமன் செய்கிறது. அதோடு சிறுநீர் பையில் கற்கள் சேருவதை தடுக்கும் மருந்தாகவும் உதவுகிறது.
தர்பூசணி நீர்ச்சத்து அதிகமாக இருக்கிறது. எனவே உடல் சூடாக இருக்கும் நேரத்தில் நீர்ச்சத்து அளித்து அதை தணிக்க உதவுகிறது. மேலும் இதை சாப்பிட்ட உடன் வயிறு நிரம்பிய உணர்வை அளிப்பதால் எடை இழப்புக்கு பெரும் உதவியாக இருக்கும். அதோடு உடலிலுள்ள மோசமான கொழுப்பை குறைக்கவும் உதவும்.
தர்பூசணி ஜூஸில் நல்ல அளவு ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. மேலும் லைகோபீன் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும், சிறந்த இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவுகிறது. சிவப்பு சாற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சருமத்தை பிரகாசமாக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
மிதமான முறையில் நுகரும்போது நீரிழிவு நோயாளிகளுக்கு தர்பூசணி பாதுகாப்பானது. இது அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. ஆனால் அதன் அதிக நீர் உள்ளடக்கம் காரணமாக குறைந்த கிளைசெமிக்சுமை, அதாவது சிறிய பகுதிகளில் சாப்பிடும்போது இரத்த சர்க்கரை அளவை இது கணிசமாக பாதிக்காது. சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு 150 கிராம் (ஒரு கப்) தர்பூசணி சாப்பிடலாம்.
தர்பூசணியில் அதிகளவில் நீர்ச்சத்து இருக்கிறது. இவை சோர்வை நீக்கி சுறுசுறுப்பை கொடுக்கும் ஆற்றல் கொண்டது. அதேபோல், உடல் உறுப்புகளில் உருவாகும் இன்ஃப்ளமேஷனை தடுக்கவும் உதவுகிறது குறிப்பாக, மாலை நேரத்தில் நடைபயிற்சிக்கு பின்னர் தர்பூசணி சாப்பிடுவது கூடுதல் நன்மையை தரும். தர்பூசணி, வெறும் நீர்ச்சத்து நிறைந்த பழம் மட்டுமின்றி, ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை அதிகரிக்கத் தேவையான இரண்டு விதமான எல்-சிட்ருலின் மற்றும் லைகோபீன் என்னும் சத்துக்களையும் அதிகம் கொண்டது.
தர்பூசணியில் அதிக அளவு தண்ணீர் இருப்பதால், உடல் நீரிழப்பு ஏற்படாது. உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது. மாலை அல்லது இரவில் தர்பூசணி சாப்பிடுவது அல்லது அதன் சாறு குடிப்பது உடலை குளிர்விக்கும். எனவே இரவில் தர்பபூசணி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. தர்பூசணியை வெட்டிய உடனே சாப்பிடுவது நல்லது. நீங்கள் அதை குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டியிருந்தால், அதில் துளைகள் உள்ள ஒரு மூடியால் மூடி வைக்கவும். இது பழத்தில் அதிகப்படியான ஈரப்பதம் படிவதைத் தடுக்கிறது மற்றும் பாக்டீரியாக்கள் வளர்வதைத் தடுக்கிறது. இருப்பினும், நிபுணர்களின் கூற்றுப்படி, தர்பூசணியை வெட்டிய 2-3 மணி நேரத்திற்குள் சாப்பிடுவது சிறந்தது.