குளிர்காலத்தில் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் வழிகள்!

Winter skin rejuvenation
Winter skin rejuvenation
Published on

ருமத்திற்குத் தேவையான ஈரத்தன்மை, எண்ணெய் பசை வழங்கும் சுரப்பிகளின் செயல்பாடுகள் பனிக்காலத்தில் குறையும்‌. இதனால் சருமம் வறண்டு, சருமத்தில் சுருக்கங்களும், மாற்றங்களும் ஏற்படுகின்றன. ‌மேலும், பனியில் குளிர்காற்று அதிகமாக வீசும். இதனால் சருமம் எளிதாக வறண்டு போகும். ஆகவே, பெண்கள் உணவு, உடற்பயிற்சி, உடல் பராமரிப்பு போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

பனிக்காலத்தில் உடற்சூடு குறையாமல் இருக்க பாதாம் பருப்பு, வேர்க்கடலை, அரிசி, கோதுமை, முந்திரிப் பருப்பு ஆகிய உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பெண்கள் உடலில் தேங்காய் எண்ணைய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய்  இவற்றில் ஏதாவது ஒன்றை தேய்த்து மசாஜ் செய்து பின்னர் குளிக்க வேண்டும். உடலில் எப்போதும் எண்ணெய் பசை இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெள்ளை டர்னிப்பின் ஆரோக்கிய நன்மைகள்!
Winter skin rejuvenation

இரவில் உதட்டில் வெண்ணெய் தடவி வர உதடு வெடிப்பு ஏற்படாது. சோப்பு போட்டு குளிக்காமல் கடலை மாவு, பாசிப்பருப்பு மாலைப் பயன்படுத்த வேண்டும். பன்னீர், கிளிசரின் இரண்டையும் கலந்து தூங்கச் செல்லும்போது கால் பாதங்களிலும், கை விரல்களிலும் தேய்த்துக் கொண்டால் சருமம் மிருதுவாக அழகாக இருக்கும்.

பாதங்களில் ஃபுட் க்ரீம் அல்லது வாசலின் தடவ, சொரசொரப்பின்றி மிருதுவாக இருக்கும். பாத வெடிப்பின் மீது மஞ்சள் தூள், விளக்கெண்ணெய் கலந்து தடவ வெடிப்பு மறையும். இரவில் பாதங்களை உப்பு கலந்த மிதமான வெந்நீரில் மூழ்க வைத்து கழுவி, துடைத்து வாசலின் தடவலாம்.

பாத வெடிப்பு மறைவதற்கும் சருமம் வெள்ளை பூத்தாற்போல் இருப்பதையும் இது மாற்றுகிறது. தேங்காய் எண்ணெய், பசு நெய், தேன்,மஞ்சள் தூள் ஆகியவற்றை கலந்து காலில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தடவி கழுவி வர பாதம் வெடிப்பின்றி சருமம் பளபளப்பாக இருக்கும். பனிக்காலத்தில் கை, கால் நகங்களில் மருதாணி வைத்துக்கொள்ளலாம். இது கை மூட்டுகளில் ஏற்படும் வலியைக் குறைக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 5 உணவுகள்!
Winter skin rejuvenation

எல்லாவற்றையும் விட உடற்பயிற்சி மிகவும் நல்லது. உடற்பயிற்சியின் மூலம் இரத்த ஓட்டம் அதிகமாகி உடலின் தட்பவெட்ப நிலையும் பராமரிக்கப்பட்டு அழகும் பாதுகாக்கப்படும். துளசி, ஓமம், புதினா இலை கொண்டு டீயாகவோ, சூப்பாகவோ பருக, தொண்டைக்கு இதமாக இருக்கும். குளிக்கும் தண்ணீரில் யுடிகொலோன் கலந்து குளிக்க நாள் முழுவதும் புத்துணர்ச்சியாய் இருக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com