சின்னஞ்சிறு மாற்றங்களாலேயே உடல் எடையைக் குறைக்கலாமே!

Simple weight loss ideas
Simple weight loss ideas
Published on

அதிக எடையைக் குறைப்பதற்கு எப்போதும் தீவிரமான உடற்பயிற்சிகளோ அல்லது கடுமையான உணவுத் திட்டங்களோ தேவையில்லை. வீட்டில் நாம் கடைப்பிடிக்கும் எளிமையான வாழ்க்கை முறை மாற்றங்கள் கூட இயற்கையாகவே ஒருவரின் உடலில் உள்ள கூடுதல் கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும். அதற்கு நம்மிடம் இருக்க வேண்டியது தினசரி முழுக் கவனமே. எப்படி எந்த ஒரு சிறப்பு பயிற்சியோ அல்லது உணவுகளின் தேவையின்றி நம் உடல் பருமனைக் குறைக்க முடியும்?

1. கலோரிகளைக் குறைப்பது:

கூடுதல் கலோரிகளைக் குறைப்பதற்கான எளிதான வழிகளில் ஒன்று சோம்பேறிதனத்தைக் குறைப்பது தான். தொலைபேசியில் பேசும் போது நடப்பது, லிஃப்டுகளுக்குப் (Lift) பதிலாக படிக்கட்டுகளில் ஏறுவது, நீண்ட நேரம் டிவியோ அல்லது கணினியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது இடையில் எழுந்து நம் உடலை சிறிது ஸ்ட்ரெட்ச்(Stretch) செய்வது கூட ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

நாள் முழுவதும் நிமிர்ந்த தோரணையைப் (upright posture) பராமரிப்பது, நம் உடலில் வளர்சிதை (metabolism) மாற்றத்தை மேம்படுத்துகிறது. அதுபோல் உணவுக்கு முன் 1 மணி நேரம் முன்பு தண்ணீர் குடிப்பது உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் அதிகமாகச் சாப்பிடுவதையும் தடுக்கிறது. உணவை நன்கு செரிமானம் செய்யவும் தூண்டுகிறது. ஒருவரின் நல்ல தூக்க சுழற்சி (Sleep cycle) சீரான பசி ஹார்மோன்களை (hunger hormones) உருவாக்குகிறது. இதனால் தேவையற்ற நேரங்களில் ஏற்படக்கூடிய பசி உணர்வு குறையக்கூடும்.

2. கட்டுப்படுத்த வேண்டிய உணவுப் பழக்கங்கள்:

அளவின்றி ஸ்நாக்ஸ் (snacks) சாப்பிடுவது, சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு சாப்பிடுவது (emotional eating) மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை (processed foods) அதிகமாக உட்கொள்வது போன்றவை ஒருவரின் எடையை அதிகரிக்கக்கூடும். சர்க்கரை நிறைந்த உணவுகள், வறுத்த உணவுகள் (fried foods) அதிகமாக உட்கொள்வதைக் குறைக்கப்பட வேண்டும்.

அசைவில்லாமல் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது கூட உடல் கொழுப்பு அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. எனவே, அதை தடுக்க குறுகிய நடை நடப்பதற்கு சில இடைவெளிகளை (short walking breaks) நீங்கள் எடுக்க வேண்டும்.

இரவு நேர உணவைக் குறைப்பதும் அதோடு கொஞ்சம் கொஞ்சமாக அதன் அளவைக் கட்டுப்படுத்துவதும் எடை குறைப்பு செயல்முறையைத் துரிதப்படுத்துகிறது.

படுக்கைக்கு செல்லும் முன் திரைப்படங்கள் பார்க்கும் நேரத்தைக் குறைப்பது, செல்போன் பார்க்காமலிருப்பதால் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும். ஆழ்ந்த தூக்கத்தால் உடலின் இயக்கங்கள் நன்கு மேம்படும். ஆரோக்கியமாகவும் இருப்பர். இதுவும் நம் உடலில் ஒரு சிறந்த எடை மேலாண்மைக்கு வழிவகுக்கிறது.

3. கவனத்தை திசை திருப்ப:

எடை இழப்பில் மிகப்பெரிய தடையாக இருப்பது சுய ஒழுக்கம். ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளை வீட்டில் சேமித்து வைப்பதைத் தவிர்ப்பது போன்றவை உடலில் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
யாரையும் ஆளைப் பார்த்து எடை போடாதீர்கள்!
Simple weight loss ideas

அந்த எண்ணம் எழும்போது வெளியே உங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்குகளை ரசிப்பது, தியானம் செய்வது போன்றவை தேவையற்ற நேரங்களில் ஏற்படும் உணவு ஏக்கத்திலிருந்து (food cravings) உங்கள் கவனத்தைத் திசை திருப்புகிறது.

இந்த விஷயங்களில் உங்களை நீங்களே கட்டுப்படுத்தி அதில் வெற்றி பெற்றால் அதைக் கொண்டாடுங்கள். அதுவே உங்களுக்குள் தன்னம்பிக்கையை அதிகரித்து அதற்கான தொடர்ச்சியை ஊக்குவிக்கிறது.

ஆக, எடை இழப்பு என்பது உணவுமுறை, உடற்பயிற்சியைச் சார்ந்தது மட்டுமல்ல. இது நிலைத்தன்மை, விழிப்புணர்வு மற்றும் புத்திசாலித்தனமான தேர்வுகளைப் பொறுத்து இருக்கிறது. இப்படி அன்றாட வாழ்க்கையில் ஒருவர் சின்னஞ்சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடையைக் குறைக்கலாமே!

முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.

இதையும் படியுங்கள்:
Chat GPTக்கு இணையான வேறு சில AI நுண்ணறிவு கருவிகள்...
Simple weight loss ideas

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com