நாம் சுவாசிக்கும் காற்று, சாப்பிடும் உணவு, வாழும் சூழல் என எல்லாமே நம் உடலை பல்வேறு வகையான தாக்குதல்களுக்கு உள்ளாக்குகின்றன. இந்த தாக்குதல்களின் விளைவாக உருவாகும் ஆக்சிஜனேற்ற அழுத்தம் (Oxidative Stress) நம் உடலுக்குள் பல நோய்களை ஏற்படுத்துகிறது. இந்த ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராட நமக்கு உதவும் வீரர்கள்தான் ஆன்ட்டிஆக்ஸிடென்ட்கள்.
ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் என்றால் என்ன?
நம் உடலில் இயற்கையாகவே இருக்கும் அல்லது உணவு மூலம் பெறப்படும் சேர்மங்களே ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள். இவை ஆக்சிஜனேற்ற அடுத்ததால் உருவாகும் தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளை (Free Radicals) நடுநிலையாக்கி, செல்களை பாதிப்பிலிருந்து காக்கின்றன. ஃப்ரீ ரேடிக்கல்ஸ் என்பவை தனித்தனி எலக்ட்ரான்களைக் கொண்ட அணுக்கள் அல்லது மூலக்கூறுகள். இந்த தனித்தனி எலக்ட்ரான் மற்ற அணுக்களுடன் இணைந்து நிலையான நிலையை அடைய முயற்சிக்கும். இந்த செயல்பாட்டில் ஃப்ரீ ரேடிக்கல்ஸ் உடலின் செல்களை தாக்கி சேதப்படுத்தும். இதுவே பல நோய்களுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
ஆக்சிஜனேற்ற அழுத்தம்: நாம் சுவாசிக்கும்போது உடலில் ஆக்ஸிஜன் உற்பத்தியாகிறது. இந்த ஆக்சிஜன் சில வேதியியல் எதிர்வினைகளின்போது தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளாக மாறுகிறது. இவை செல்களின் DNA, புரதங்கள் மற்றும் கொழுப்புகளை சேதப்படுத்தி பல்வேறு நோய்களை ஏற்படுத்தும்.
ஆன்ட்டிஆக்ஸிடெண்ட்களின் முக்கியத்துவம்:
ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் செல் சேதத்தைத் தடுத்து, செல்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றன. நோய்க் கிருமிகளால் ஏற்படும் நோய்த் தொற்றுக்கான எதிர்ப்பை அதிகரிக்கின்றன.
செல் சேதத்தைத் தடுப்பது மூலம் வயதாவதால் ஏற்படும் தோல் சுருக்கம், முடி நரைத்தல் போன்ற பிரச்சினைகள் தாமதப்படுகிறது. இது ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் எனப்படும் நிலையைக் குறைத்து, இதய நோய்கள், புற்றுநோய் போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன.
ஆன்ட்டிஆக்ஸிடென்ட்கள் நிறைந்த உணவுகள்:
பல வகையான பழங்கள், காய்கறிகள், பருப்புகள், நட்ஸ் போன்றவற்றில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. பழ வகைகளில் ஸ்ட்ராபெரி, ப்ளம்ஸ், திராட்சை, ஆப்பில், கொய்யா ஆரஞ்சு போன்றவற்றிலும், காய்கறிகளில் பச்சை பருப்பு, சிவப்பு பருப்பு, துவரம் பருப்பு போன்றவற்றிலும் இவை ஏராளமாக உள்ளன. மேலும், பாதாம், வால்நட், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளிலும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன.
ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நம் உடலின் பாதுகாவலன். இவை நம்மை பல நோய்களிலிருந்து பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ உதவுகின்றன. எனவே ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த உணவுகளை நம் உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் முக்கியம்.