இது தெரிஞ்சா, துத்தி இலையை டன் கணக்கில் சாப்பிடுவீங்க! 

Abutilon indicum
Abutilon indicum
Published on

ஆயுர்வேத மருத்துவத்தில் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு அற்புதமான மூலிகைதான் துத்தி. இதன் இலைகள் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. துத்தி இலைகளில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதால், இது பல நூற்றாண்டுகளாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. துத்தி இலைகளை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படுவதுடன், பல நோய்கள் தானாகவே குணமாகும். 

துத்தி இலை சாப்பிடுவதன் ஆரோக்கிய நன்மைகள்: 

துத்தி இலைகள் மூல நோய்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள குளிர்ச்சித்தன்மை மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், மூலநோயால் ஏற்படும் வீக்கம் வலியைக் குறைக்க உதவும். துத்தி இலைகளின் கசாயத்தைக் குடிப்பதால், ஆசனவாயில் எரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் நீங்கும். 

துத்தி இலைகள் தோல் நோய்களுக்கு சிறந்த மருந்தாகும். இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் சருமத் தொற்றுகளை எதிர்த்துப் போராடி, தோலை பளபளப்பாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவும். தோல் அரிப்பு, பருக்கள் மற்றும் சரும நோய்கள் போன்றவற்றை குணப்படுத்த துத்தி இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. 

சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கு முக்கிய காரணம் சிறுநீரில் கால்சியம் ஆக்சலேட் அதிகமாக இருப்பதுதான். துத்தி இலைகள் சிறுநீரில் கால்சியம் ஆக்சிலேட் படிவதைத் தடுத்து சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கின்றன. 

துத்தி இலைகளில் உள்ள நார்ச்சத்து, செரிமானத்தை மேம்படுத்தி நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க உதவும். இதனால், உடல் எடையைக் குறைக்க துத்தி இலை பயன்படும். மேலும், துத்தி இலைகள் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி, உடல் எடையைக் குறைக்கிறது. 

துத்தி இலைகள் ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டவை. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் ரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்கி, ரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. இதனால் இதய நோய்கள், பக்கவாதம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம். 

இதையும் படியுங்கள்:
குழந்தைகளைப் பெற்றெடுக்கும் அதிசய ஆண் கடல்வாழ் உயிரினம் எது தெரியுமா?
Abutilon indicum

ஆண்களுக்கு ஏற்படும் ஆண்மைப் பிரச்சனைகளுக்கு துத்தி இலைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள சத்துக்கள் ஆண்மை குறைபாட்டைப் போக்கி விந்து உற்பத்தியை அதிகரிக்க உதவும். 

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் மன அழுத்தம் என்பது மிகவும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. துத்தி இலைகள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். இதன் வாசனை மற்றும் இதில் உள்ள சத்துக்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்கும். 

எனவே, துத்தி இலைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால், உடல் ஆரோக்கியம் மேம்படுவதுடன் பல நோய்கள் விரைவில் குணமாகும். இருப்பினும், எந்த ஒரு மூலிகை மருந்தையும் பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றபின் பயன்படுத்துவது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com