குறைவான புரதச்சத்தும், உடலில் ஏற்படும் தாக்கங்களும்! 

protein
Effects does eat less protein have on the body!
Published on

புரதம் உடலுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்று. இது தசைகள், சருமம், முடி மற்றும் உடல் உறுப்புகளின் வளர்ச்சி போன்றவற்றிற்கு அவசியம்.‌ குறைவான புரதச்சத்து உட்கொள்வது உடலின் பல்வேறு செயல்பாடுகளை பாதித்து பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே, தினசரி போதிய அளவு புரதச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும்.‌ 

புரதச்சத்து குறைவாக சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்: 

புரதம் தசைகளின் முக்கியமான கட்டமைப்பு மூலம். எனவே, குறைவான புரதச்சத்து உட்கொள்வது தசை இழப்புக்கு வழிவகுக்கும். இது உடல் பலத்தைக் குறைத்து வயதானவர்களுக்கு எலும்பு முறிவு அபாயத்தை அதிகரிக்கும். குறிப்பாக, உடற்பயிற்சி செய்பவர்கள் போதுமான அளவு புரதத்தை உட்கொள்ளாவிட்டால், தசை வளர்ச்சி குறைந்து, உடற்பயிற்சியின் பலன்கள் குறையும். 

புரதம் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முக்கிய அங்கம். இது நோய்க்கிருமிகளுக்கு எதிராக போராடவும் புதிய செல்களை உருவாக்கவும் உதவுகிறது. குறைந்த புரதச்சத்து உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து தொற்று நோய்களுக்கு ஆளாகும் அபாயத்தை அதிகரிக்கும். 

புரதம், எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவும் கால்சியம் மற்றும் பிற தாதுக்களின் உறிஞ்சதலை மேம்படுத்துகிறது. குறைவான புரதச்சத்து உட்கொள்வது எலும்பு அடர்த்தியைக் குறைத்து எலும்பு முறிவு அபாயத்தை அதிகரிக்கும். 

புரதம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், கொழுப்பு அளவைக் குறைக்கவும் உதவுகிறது. இது இதய நோய் வருவதற்கான அபாயத்தைக் குறைக்கும். குறைவான புரதச்சத்து உட்கொள்வது இதய ஆரோக்கியத்தை பாதித்து இதய நோய்களுக்கு வழிவகுக்கும். 

குறைவாக புரதச்சத்து உட்கொண்டால், உடல் எடை அதிகரிக்கும் என்றால் நம்புவீர்களா? இது முரண்பாடாகத் தோன்றினாலும் குறைவான புரதச்சத்து உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்பதே உண்மை. புரதம் செரிமானத்தை மெதுவாக்கி நீண்ட நேரம் நிறைந்த உணர்வைத் தருகிறது. இதனால், அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்படும். குறைவான புரதச்சத்து உட்கொள்வது கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச்சத்து அதிகமாக உட்கொள்ள வைத்து, உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.‌ 

இதையும் படியுங்கள்:
உங்கள் குழந்தை பற்றிய புகழ்ச்சி மற்றவர் மனதைப் புண்படுத்தும் என்பதை அறிவீர்களா?
protein

குழந்தைகளுக்கு புரதச்சத்து மிகவும் முக்கியம். இது வளர்ச்சி மற்றும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு அவசியம். குறைவாக புரதச்சத்து உட்கொள்வது குழந்தைகளில் வளர்ச்சி குறைபாடு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு மற்றும் பிற ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாகும்.

புரதச்சத்து குறைவாக உட்கொள்வது உடலின் பல்வேறு செயல்பாடுகளை பாதித்து பல ஆரோக்கியப் பிரச்சனைகளை உண்டாக்கலாம். எனவே, போதுமான அளவு புரதச்சத்து உட்கொள்வது மிகவும் முக்கியம். பருப்பு வகைகள், பால் பொருட்கள், இறைச்சி, மீன், முட்டை போன்ற உணவுகளில் புரதச்சத்து அதிக அளவில் உள்ளது. எனவே, உங்கள் உடல் நலனை மேம்படுத்த புரதட்சத்துடன் சேர்ந்த சமச்சீர் உணவை உட்கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com