சர்க்கரை நோயாளிகள் தயிர் சாப்பிட்டா என்ன ஆகும் தெரியுமா? 

what happens when diabetics eat curd?
what happens when diabetics eat curd?

தயிர் பலரால் விரும்பப்படும் ஒரு பிரபலமான மற்றும் சத்து மிகுந்த உணவாகும். இருப்பினும் நீரிழிவு நோயாளிகள் தயிர் சாப்பிடக்கூடாது என்று பரவலாக சொல்லப்படுகிறது. இந்தப் பதிவில் நீரிழிவு நோயாளிகள் ஏன் தயிரை தவிர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் பற்றி பார்க்கலாம். 

கார்போஹைட்ரேட்: தயிரில் லாக்டோஸ்  வடிவத்தில் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இது பாலில் இருக்கும் இயற்கையான சர்க்கரையாகும். நீரிழிவு நோயாளிகள் அதிக கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சாப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக உயர்கிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் தங்கள் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த தயிர் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

சுவைகள் மற்றும் சர்க்கரைகள் சேர்க்கப்படுகிறது: வணிகரீதியாக கிடைக்கும் சில தயிர்களில் கூடுதலாக சர்க்கரை மற்றும் ஃப்ளேவர்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம். இத்தகைய தயிரை உட்கொள்வதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு விரைவாக அதிகரிக்கும். எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு பொருத்தமானது அல்ல.

கிளைசெமிக் இன்டெக்ஸ்: ஒரு உணவு எவ்வளவு வேகமாக இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பதை அளவிடுவது கிளைசெமிக் இன்டெக்ஸ் (GI) குறியீடாகும். வீட்டில் ஆரோக்கியமாக செய்யும் தயிரில் இந்த குறியீடு குறைவாக இருந்தாலும், சுவையூட்டப்பட்ட தயிர்களில் இதன் அளவு அதிகமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
இந்தியர்களுக்கான ஆரோக்கியமான 10 உணவுமுறைப் பழக்கங்கள்!
what happens when diabetics eat curd?

புரதம் மற்றும் கொழுப்பு: தயிரில் அதிக அளவில் புரதம் மற்றும் கொழுப்பு இருக்கும். இவை ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவினாலும், சில குறிப்பிட்ட வகை மற்றும் பிராண்டுகளின் அடிப்படையில் புரதம் மற்றும் கொழுப்பின் அளவு மாறுபடலாம். இவை உடற்பருமனுக்கு வழிவகுத்து, நீரிழிவு பாதிப்பை அதிகப்படுத்தலாம். எனவே நீரிழிவு நோயாளிகள் இவற்றைக் கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றவாறு தைரை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாமா வேண்டாமா என்பதை முடிவெடுக்கவும். 

சர்க்கரை நோயாளிகள் தயிரை எப்படி சாப்பிடலாம்? 

சில சர்க்கரை நோயாளிகளுக்கு தயிர் விருப்ப உணவாக இருந்தால், அதை நேரடி தயாராக எடுத்துக் கொள்ளாமல், மோர் தயாரித்து சாப்பிடுங்கள். குறிப்பாக அதில் அதிக அளவு தண்ணீர் இருக்க வேண்டும். இப்படி சாப்பிடுவது மூலமாக உங்களுக்கு அதிக பலன் கிடைக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com