உங்கள் உடலில் இன்சுலின் செய்யும் மாயம்! 

What insulin does to our Body?
What insulin does to our Body?
Published on

நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் கார்போஹைட்ரேட்கள் உடலில் குளுக்கோஸாக மாற்றப்படுகின்றன. இந்த குளுக்கோஸ் நம் உடலில் முக்கிய எரிபொருளாக செயல்படுகிறது. ஆனால், இந்த குளுக்கோஸ் செல்களுக்குள் சென்று ஆற்றலாக மாறுவதற்கு இன்சுலின் என்ற ஹார்மோன் அவசியம். இன்சுலின் நம் கணையத்தில் உள்ள பீட்டா செல்களால் சுரக்கப்படுகிறது. இந்த இன்சுலின் இல்லாமல் அல்லது போதுமான அளவு சுரக்காமல் போனால் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படலாம். 

இன்சுலின் என்றால் என்ன? 

இன்சுலின் என்பது ஒரு பெப்டைட் ஹார்மோன் ஆகும். இது நம் உடலில் உள்ள செல்களுக்கு குளுக்கோசை எடுத்துச் சென்று அதை ஆற்றலாக மாற்ற உதவுகிறது. இது இல்லாமல் போனால் குளுக்கோஸ் செல்களுக்குள் நுழைய முடியாமல் ரத்தத்திலேயே தேங்கிவிடும். இதுதான் நீரிழிவு நோய்க்கான முக்கிய காரணம். 

இன்சுலினின் செயல்பாடுகள்: 

இன்சுலின் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை செல்களுக்குள் கொண்டு செல்ல உதவும் ஒரு தோட்டா போன்றது. இது குளுக்கோ செல்களுக்குள் நுழைய வழியை ஏற்படுத்தித் தருகிறது. 

இன்சுலின் உடலில் உள்ள கூடுதல் குளுக்கோஸை கொழுப்பு மற்றும் புரதமாக மாற்றி சேமிக்க உதவுகிறது. இது உடலுக்கு தேவையான ஆற்றலை சேமித்து வைக்க உதவும். நமது உடலில் உள்ள கல்லீரலும் குளுக்கோசை உற்பத்தி செய்யும். ஆனால், இன்சுலின் இந்த செயல்பாட்டை குறைத்து ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. 

இன்சுலின், கொழுப்பு அமிலங்கள் உடைவதைத் தடுத்து உடலில் கொழுப்பு சேமிப்பை அதிகரிக்கிறது. நமது உடலில் இன்சுலின் போதுமான அளவு இல்லாமல் போனால் அது உடலின் செல்களில் இன்சுலினை சரியாக பயன்படுத்த முடியாமல் நீரிழிவு நோய் ஏற்படலாம். நீரிழிவு நோயில் மொத்தம் இரண்டு வகை உள்ளது. 

  • வகை 1 நீரிழிவு நோய் ஏற்பட்டால் கணையம் போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யாது. இது பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான பிரச்சனைகளால் ஏற்படுகிறது. 

  • வகை 2 நீரிழிவு நோயினால் உடலில் செல்கள் இன்சுலினை சரியாக பயன்படுத்த முடியாமல் போகும். இது பெரும்பாலும் பரம்பரை, உடல் பருமன் மற்றும் குறைந்த உடற்பயிற்சி போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
ஹார்மோன் சுரப்பை இயற்கை முறையில் சமநிலையில் வைக்க 6 டிப்ஸ்!
What insulin does to our Body?

இன்சுலின் நம் உடலின் முக்கிய ஹார்மோன்களில் ஒன்றாகும். இது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தி நம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. இன்சுலின் குறைபாடு நீரிழிவு நோய்க்கு வழி வகுத்து பல்வேறு வகையான ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றுவதன் மூலம் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்து ஆரோக்கியமாக வாழலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com