
நிக்டோஃபோபியா என்பது இருளைப் பற்றிய பயம். இது ஒரு வகையான மனநிலை. இந்த மனநிலையில் இருப்பவர்கள் இருளை எதிர்கொள்வதை தவிர்ப்பார்கள். இத்தகைய மனநிலை உள்ளவர்கள் இருட்டில் செல்ல பயப்படுவார்கள்.
அறிகுறிகள்:
பயம் மற்றும் பதற்றம் ஏற்படும்.
இருட்டில் இருக்கும் பொழுது வேகமான இதயத்துடிப்பு, வியர்வை, மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் தென்படும்.
இருட்டில் இருக்கும் போது அசௌகரியமாக உணர்வார்கள்.
இருட்டிலிருந்து தப்பிக்கும் எண்ணம் ஏற்படும்.
தீவிர பயம், வியர்வை, சுவாசக் கோளாறுகள், மன அழுத்தம், போன்றவை ஏற்படும்.
காரணங்கள்:
குழந்தை பருவம்:
இருள் மற்றும் இரவு பற்றிய பயம் பெரும்பாலும் குழந்தை பருவத்தில் தொடங்குகிறது. அந்த வயதில் அது வளர்ச்சியின் இயல்பான பகுதியாக இருக்கலாம். ஆனால் வளர்ந்து வர வர பயம் போய்விடும்.
மரபணு காரணங்கள்:
குடும்ப மரபணு காரணமாகவும் இந்த பயம் உண்டாக்கலாம். கவலைக் கோளாறுகள் இருந்தால் நிக்டோஃபோபியா ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது.
முன்பு ஏற்பட்ட பயங்கரமான அனுபவங்கள்:
அதிர்ச்சிகரமான நிகழ்வு அல்லது ஒரு பயங்கரமான அனுபவம் இருப்பின் இருளைப் பற்றிய பயம் அதிகரிக்கும்.
கற்பனையான எண்ணங்கள்:
இருட்டில் என்ன நடக்குமோ என்று பயப்படுவது, இருட்டில் ஆபத்து இருப்பதாக கற்பனை செய்து கொள்வது, இருட்டை பற்றி தவறான எண்ணங்களை கொண்டிருப்பது ஆகியவை இருளை பற்றிய பயத்திற்கு காரணங்களாகும்.
தீர்வுகள்:
பயத்தை கையாளுதல்:
பயம் தூண்டப்படும் சூழ்நிலைகளைத் தவிர்ப்பதை விட அந்த சூழ்நிலைகளை கையாளத் தெரிந்து கொள்வதன் மூலம் பிரச்சனைகளை சரி செய்ய முடியும். இதற்கு படிப்படியாக இருட்டில் இருக்கக்கூடிய நேரத்தில் அதிகரிக்க முயற்சி செய்யலாம்.
இருளைப் பற்றிய தவறான எண்ணம்:
இருட்டில் ஆபத்து எதுவும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு இருட்டைப் பற்றிய தவறான எண்ணங்களை மனதில் இருந்து நீக்கிவிட பயத்தை குறைக்க முடியும்.
ஆழ்ந்த சுவாசம் மற்றும் உடற்பயிற்சி போன்றவை மன அழுத்தம் மற்றும் இருளை பற்றிய பயத்தை சமாளிக்க உதவும்.
பயத்தை கையாளும் முறையை தெரிந்து கொள்வதுடன் தேவைப்பட்டால் மனநல நிபுணரை சந்தித்து அவரது ஆலோசனைப்படி கவலைக்கு உதவும் மருந்துகள் அல்லது மனநல சிகிச்சை மூலம் ஏற்படும் கவலை மற்றும் பயத்தை போக்கலாம்.
சில பயங்கள் இயல்பானது தான் என்றாலும் அது நம் அன்றாட வாழ்க்கையையோ, தூக்க முறைகளையோ பாதிக்கத் தொடங்கினால் அதற்கான மருத்துவரை கலந்தாலோசிப்பது மிகவும் நல்லது.
(முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.)