உடலுக்கு நல்லது பச்சை கத்திரிக்காயா? அல்லது கலர் கத்திரிக்காயா?.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!

Brinjals.
Brinjals.

என்னதான் கத்திரிக்காய் பலகாலமாகவே நாம் பயன்படுத்தும் ஒரு காய்கறியாக இருந்தாலும் நம்மில் பலருக்கு இதை பிடிப்பதில்லை. குறிப்பாக குழந்தைகளும் இளைஞர்களும் கத்திரிக்காயை விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் வயதில் பெரியவர்கள் கத்திரிக்காயை விரும்பி சாப்பிடுவதை பார்த்திருப்பீர்கள். ஏனெனில் இதில் அதிக ஊட்டச்சத்துக்களும் மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளது. ஆனால் இதன் சுவை அந்த அளவுக்கு நன்றாக இருக்காது என்பதால் இதன் மருத்துவ குணங்களை பலர் உணர்வதில்லை. 

கத்திரிக்காய் பற்றி நாம் முக்கியமாக அறிய வேண்டியது என்னவென்றால் அதன் பூர்வீகமே இந்தியாதான். ஆம் கத்திரிக்காய் நம்ம நாட்டு காய்கறி. இதில் குறைந்த கலோரி இருப்பதால் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் கத்திரிக்காயை எடுத்துக் கொள்ளலாம். இப்போது கத்திரிக்காய் பல நிறங்களில் இருக்கிறது. கத்திரிக்காயின் மரபணுவை மாற்றுவதன் மூலமாக அதன் நிறம் மாறிவிட்டது. எனவே தற்போது இயற்கையிலேயே கத்திரிக்காய் பல நிறங்களைக் கொண்டு உற்பத்தி ஆகிறது. 

வெள்ளை கத்திரிக்காய்: வெள்ளை கத்திரிக்காய் சூரியனில் உள்ள எல்லா நிறத்தையும் உள்வாங்கிக் கொள்வதால் வெள்ளையாக இருக்கிறது என சொல்கின்றனர். இதில் எல்லா விதமான சத்துக்களும் நிறைந்து காணப்படும். கத்திரிக்காய் பித்தத்தை தூண்டிவிடும் என்றாலும் ஒரு சிறந்த மலமிளக்கியாக செயல்படும். குறிப்பாக கல்லீரல் செயல்பாட்டுக்கு இது மிகவும் நல்லது. அதேநேரம் குழந்தைகள் இதை அதிகமாக சாப்பிடக்கூடாது என்றும் கூறுகின்றனர்.

நீல கத்திரிக்காய்: இந்த வகை கத்திரிக்காய் பூவிலிருந்து காயாக மாறும்போது சூரிய ஒளியை கிரகித்து பூமியில் இருக்கும் இரும்புச்சத்தை இழுத்துக் கொள்வதால் நீல நிறத்திற்கு மாறுகிறது என சொல்லப்படுகிறது. இந்த வகை கத்திரிக்காய் உடலில் ஏற்படும் ரத்த குறைபாடு, உடல் சோர்வு மற்றும் கல்லீரல் நோய்களுக்கு சிறந்த தீர்வைக் கொடுக்கும் என்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
சுட்ட கத்திரிக்காய் ஸ்பெஷல் ரெசிபி!
Brinjals.

வெள்ளை பச்சை கத்திரிக்காய்: இந்த நிற கத்திரிக்காயும் வெள்ளை நிற கத்திரிக்காய் போலதான். இது கல்லீரல் வீக்கத்தை சரி செய்யுமாம். இந்த உலகம் எப்படி உருவாகியிருக்கிறதோ அதே போல தான் நமது உடலும் உருவாகி இருக்கிறது. எனவே சரியான காய்கறிகளை தேர்வு செய்து நாம் சாப்பிடும்போது உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்கின்றனர் வல்லுநர்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com