உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது உலர் மூலிகைகளா? புதிய மூலிகைகளா?

உலர் மூலிகைகள், புதிய மூலிகைகள்
உலர் மூலிகைகள், புதிய மூலிகைகள்
Published on

மது உடல் ஆரோக்கியத்திற்கு காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்கிறோம். இதில் மூலிகைகளும் அடங்கும். உணவுகளை உயர்த்துவதற்கு இன்றியமையாத முடிவாக மூலிகைகள் அமைகின்றன. கொத்தமல்லி, துளசி, புதினா போன்ற நறுமண சேர்க்கைகள் சுவையை அதிகரிப்பதுடன் பல ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது. உலர்ந்த மற்றும் புதிய மூலிகைகள் இரண்டுமே உடனடியாக கிடைக்கக்கூடியதாகும். இந்த இரண்டுமே தனித்தனி குணங்களைக் கொண்டுள்ளன.

இரண்டுக்கும் உள்ள வேறுபாடு: புதிய மற்றும் உலர்ந்த மூலிகைகளின் ஊட்டச்சத்துக்களை ஒப்பிடும்போது, புதிய மூலிகைகள் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன. மூலிகைகள் உலர்த்தப்படும்போது அதிலுள்ள சில நீர் உள்ளடக்கம் ஆவியாகி சில கலவைகளின் செறிவுக்கு வழிவகுக்கலாம். எனினும் செயல் முறையானது வைட்டமின் ‘சி’ போன்ற நீரில் கரையக்கூடிய வைட்டமின்களின் இழப்பையும் ஏற்படுத்தலாம். எனவே, உலர்ந்த மூலிகைகள் சுவையில் பெரிதாக இருப்பினும், ஊட்டச்சத்து நன்மைகளில் புதிய மூலிகைகளே சிறந்தவை.

சுவையின் அடிப்படையில்: சமையலில் சுவைக்காக மூலிகைகள் சேர்க்கப்படுகின்றன. இதில் புதிய மூலிகைகள் அவற்றின் துடிப்பான மற்றும் நறுமண குணங்களுக்காக சேர்க்கப்படுகின்றன. இது உணவின் கலவையை உயர்த்துகிறது. அதேசமயம் உலர்ந்த மூலிகைகள் நீரிழப்பு செயல் முறையால் அதிக செறிவூட்டப்பட்ட சுவை கொண்டவைகளாக மாறுகின்றன. இதில் உலர்ந்த மூலிகைகள், புதிய மூலிகைகளுடன் ஒப்பிடுகையில் அதிக சுவை கொண்டிருக்கிறது.

சேமித்து வைக்கப்படும் காலம்: இது உலர்ந்த மூலிகைகளின் முக்கிய நன்மைகளில் ஒன்றாகும். இதில் ஒழுங்காக சேமித்து வைக்கப்பட்ட உலர்ந்த மூலிகைகள் பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட சுவையைக் காத்து நன்றாக மற்றும் பயனுள்ளதாக இருக்கும். அதேசமயம், புதிய மூலிகைகளை நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியாது. இது குறுகிய ஆயுளை கொண்டவை. இதை உடனடியாக பயன்படுத்தாவிட்டால் வாடி அல்லது கெட்டு போய் விடலாம். எனவே, சேமித்து வைக்கப்படும் காலம் புதிய மூலிகைகளுடன் ஒப்பிடுகையில் உலர்ந்த மூலிகைக்கே அதிக மதிப்பு.

ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம்: மூலிகைகளின் சிறந்த மற்றும் முக்கிய ஆரோக்கிய நன்மைகளில் ஒன்றாக அமைவது அதன் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த தன்மை ஆகும். குறிப்பாக, உலர்த்தும் செயல்முறையில் மூலிகைகளில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றத்தை கணிசமாக குறைக்காது. இந்த ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கத்தை பொறுத்தவரை புதிய மற்றும் உலர்ந்த மூலிகைகள் இரண்டுமே நன்மை பயக்கக்கூடியதாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
தம்பதியருக்குள் ஆரஞ்சு தோல் கோட்பாடு ஏற்படுத்தும் விளைவுகள் தெரியுமா?
உலர் மூலிகைகள், புதிய மூலிகைகள்

புதிய மற்றும் உலர்ந்த மூலிகைகளின் விலை: விலையைப் பொறுத்த மட்டில் உலர்ந்த மூலிகைகள் புதிய மூலிகைகளை விட பெரும்பாலும் பட்ஜெட்டிற்கு ஏற்றது ஆகும். உலர்ந்த மூலிகைகளை நீண்ட நாள் சேமித்து வைப்பதை கருத்தில் கொள்ளும்போது இது ஏற்றதாக அமைகிறது. எனினும் உலர்ந்த மூலிகைகளின் செலவு மற்றும் செயல்திறன் போன்றவற்றை புதிய மூலிகைகளுடன் ஒப்பிடுகையில் அதன் சுவை மற்றும் ஊட்டச்சத்து குறையும்.

எது சிறந்தது: இவை இரண்டுமே உடல் ஆரோக்கியத்துக்கு தனித்துவமான நன்மைகளை வழங்குகின்றன. ஆனால், புதிய மூலிகைகள் அவற்றின் குறைந்த அளவு பதப்படுத்தப் பட்ட தன்மை காரணமாக சிறிதளவு நன்மையை தரலாம். இவை சமையல் அறையில் நீண்ட காலத்திற்குப் பயன்படாது உலர்ந்த மூலிகைகள் நீண்ட ஆயுட்காலம் மற்றும் வசதிகளுக்கு ஏற்றதாகும். அதே சமயம், புதிய மூலிகைகள் சுவை மற்றும் நறுமணத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக அமைகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com