
தயிர் சாதம் அல்லது கிச்சடி இரண்டுமே நாவுக்குச் சுவை தரும் என்பதில் சந்தேகமில்லை.
ஒவ்வொன்றிலும் புரோடின் பைபர், fat எவ்வளவு உள்ளது என்பதைப் பார்ப்போமா.?
தயிர்சாதம் கிச்சடி
கலோரி 180-220 200-250
புரோட்டடீன் 6 g 8gm
கொழுப்பு 6gm 8gm
Carbohydrates 35gm 35gm
Fibre negligible 04 gm (higher . . with veggies.)
PROBIOTICS ஆம் இல்லை.
எல்லோருக்கும் தெரியும் தயிர்சாதம், கிச்சடி இரண்டுமே gluten free என்று. இரண்டு உணவுகளும் வெவ்வேறு சுவையைக் கொடுக்கும்.
கிச்சடியில் சில காய்கறிகள் சேர்த்துச் செய்கிறோம். இந்த உணவில் fibre உள்ளது. நாம் உடல் நிலை சரியில்லாத போது வாய்க்கு சூடாகக் கிச்சடி சாப்பிடும் போது அது ஒரு தனிச்சுவை தான்.
ஆனால் தயிர் சாதம் குளிர்ந்த தயிரில் மீதி உள்ள சாதத்தில் தயார் செய்யப்படுகிறது. இதில் fibre இல்லாது போனாலும் இந்தத் தயிர் சாதம் உடலுக்கு நல்லது. இதில் புரோட்டீன் கால்சியம் உள்ளது. மேலும் குளிர்ந்த நிலையில் இருப்பதால் ஜீரண சக்தி எளிதாகிறது. புரோபியோடிக்ஸ் இருப்பதால் தயிர் சாதம் எந்தத் தீங்கும் விளைவிக்காது.
ப்ரோபயோடிக் என்றால் என்ன?
புரோபயாடிக்குகள் என்பது உயிருள்ள நுண்ணுயிரிகளாகும். பொதுவாகக் குடல் நுண்ணுயிரிகளை மேம்படுத்துதல் அல்லது மீட்டெடுப்பதன் மூலம் உட்கொள்ளும் போது அவை ஆரோக்கிய நலன்களை வழங்குகின்றன.
தயிர் சாதம், கிச்சடி இரண்டுமே ஹெல்தி என்றாலும் நம் தயிர் சாதம் பல வித நன்மைகளைக் கொண்டுள்ளது. அதிக ஆரோக்கியமானது.
என்ன, சரிதானே நண்பர்களே?