பொதுவாகவே 50 வயதை தாண்டிய பெண்களுக்கு எலும்பின் அடர்த்தியும் உறுதி தன்மையும் குறைந்துவிடும். அதற்கு கால்சியம் ஊட்டச்சத்து குறைபாடுதான் முக்கிய காரணம். மெனோபாஸ் பீரியட் முடிந்தவுடன் பெண்கள் தங்கள் உடல் மீது அக்கறை காட்டுவதில்லை.
அதன் பின்னர் பெண்களுக்கு கால்சியம் ஊட்டச்சத்து குறைபாட்டால் எலும்புகளின் அடர்த்தி குறைந்து வலுவிழந்து பொறை போல மாறிவிடும். கீழே விழுந்தாலோ அல்லது அடிபட்டாலோ எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சிலருக்கு கீழே விழுந்து இடுப்பு எலும்பு உடைந்து செயற்கை மூட்டுகள் வைக்க வேண்டிய நிலை கூட ஏற்படலாம். இத்தகைய குறைபாட்டை நிவர்த்தி செய்ய 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்கள் சாப்பாட்டில் பால், முட்டை, காய்கறிகள், நட்ஸ் போன்றவற்றை தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் எலும்பின் அடர்த்தி குறையாமல் பார்த்துக் கொள்ளலாம். வந்தபின் காப்பதை விட வருமுன் காப்பது சிறந்தது. இன்றைய சூழ்நிலையில் மகப்பேறு டாக்டர்கள் நாளமில்லா சுரப்பி டாக்டர்கள் எலும்பு முறிவு டாக்டர்கள் என இப்ப இந்த சிகிச்சைக்கு நிறைய உதவி செய்கிறார்கள்.
இருப்பினும் நம் உடம்பை பாதுகாக்க வேண்டியது நம் கையில் தான் உள்ளது. இது ஆண்களுக்கும் பொருந்தும். எலும்பின் அடர்த்தியும் உறுதி தன்மையும் குறையும் போது அது பொறை போல நொறுங்குவதற்கு வழிவகுக்கும். அதற்கு இடம் அளிக்காமல், நம் உடம்பை பேணி காப்பது அவசியம். அதற்கு தினசரி உணவில் கால்சியம் சத்துக்கள் நிறைந்த பால் காய்கறிகள் பழங்கள நட்ஸ் போன்றவற்றை சேர்த்துக் கொள்வது அவசியம். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)