பலரின் முடி உதிர்வுக்கு காரணம் வைட்டமின் பி12 ஆகதான் இருக்கும். முடி உதிர்வுக்கும் வைட்டமின் பி12 க்கும் உள்ள தொடர்பைப் பார்ப்போம்.
பலர் சந்தித்து வரும் முக்கிய பிரச்னை முடி உதிர்வாகும். இதனை சரிசெய்ய பலர் வீட்டு வைத்தியங்களையும், பார்லர் சென்றும் சிகிச்சையும் எடுத்துக் கொள்கின்றனர். ஆனாலும், இன்றைய பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் சந்திக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்னையாகவே இது இருக்கிறது.
முக்கால் வாசி பேருக்கு வைட்டமின் பி12 குறைப்பாடு காரணமாகத்தான் முடி உதிர்வு ஏற்படுகிறது.
முதலில் வைட்டமின் பி12ன் அவசியம் குறித்துப் பார்ப்போம்.
நரம்பு ஆரோக்கியத்திற்கும், ரத்த சிவப்பணுக்கள் சுரப்பதற்கும் இந்த பி12 ஊட்டச்சத்தின் பங்கு அதிகம். நமது முடியின் வேர் பகுதியை வலிமையாக்குகிறது.
இந்த வைட்டமின் குறைபாடு ஏற்பட்டால் மயிர்க்கால்களில் உள்ள செல்களின் வளர்ச்சியையும் பெருக்கத்தையும் பாதிக்கும். இதன் காரணமாக உச்சந்தலையில் ரத்த ஓட்டம் சீராகும்.
மேலும் இது இரத்த சிவப்பணு உருவாக்கத்துக்கு உதவுவதால், சீரான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்ல முடிகிறது. மேலும் உடலில் வைட்டமின் பி12 அளவு குறைவது ஃபோலேட் அளவை அதிகரிக்க அனுமதிக்கிறது. அதிகரித்த ஃபோலேட் அளவுகள் முடி உதிர்தலுடன் இணைக்கப்பட்டுள்ளது. வைட்டமின் பி12 அளவை சரி செய்வது முடி உதிர்தலுக்கு சிகிச்சையளிக்க உதவும் என்று ஆராய்ச்சியில் சுட்டிக்காட்டுகிறது.
வைட்டமின் பி12 குறைவாக இருந்தால் என்ன அறிகுறிகள் தென்படும்?
மிகவும் சோர்வாக இருக்கும். மறதி, கூச்சம், மூச்சுத் திணறல், தலை வலி, ஆற்றல் இழப்பு, பசியின்மை, மனதளவில் சோர்வு போன்றவை ஏற்படும்.
மேலும் கூந்தல் வறட்சி ஏற்பட்டு முடி உடையத்தொடங்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே வைட்டமின் பி12 குறைந்துவிட்டது என்று அதற்கான நடவடிக்கைகளை எடுக்காதீர்கள். ஒருமுறை மருத்துவரை ஆலோசித்து உண்மையாகவே வைட்டமின் பி12 குறைவாக இருந்தால், சரி செய்ய முயற்சிக்கலாம்.
வைட்டமின் பி12 ஐ நீங்கள் மாத்திரைகள் வழியாகவோ? ஊசி வழியாகவோ? எடுத்துக்கொள்ளலாம். மேலும் பி12 ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளான இறைச்சி உணவுகள், முட்டை, பால் போன்ற உணவுகளையும் தினசரி சேர்த்துக் கொள்ளலாம்.
வைட்டமின் பி12 ஐ சீராக்க முயற்சி செய்யும்போதுஆரோக்கியமான மற்றும் இரசாயனங்கள் அற்ற ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் போன்றவற்றை கூந்தலுக்கு பயன்படுத்துவது நல்லது.