

தற்போது உள்ள காலக்கட்டத்தில் நரைமுடி(Grey hair) என்பது இளைஞர்கள் மத்தியிலே பெரும் பிரச்னையாக உள்ளது. இது அவர்களின் அழகை பாதிப்பதோடு மட்டுமில்லாமல் தன்னம்பிகையையும் குறைக்கிறது. இந்த பதிவில் நரைமுடியை போக்க என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை பற்றி விரிவாக காண்போம்.
நம் தலையில் Hair follicles இருக்கும். அதிலிருந்து தான் முடி வளரும். நம் முடிக்கு தேவையான சத்துக்களும் அங்கிருந்து தான் கிடைக்கும். அதில் Melanocytes என்ற செல் இருக்கும். இந்த செல்கள் Melanin என்ற நிறமியை உருவாக்கும். இந்த நிறமி சரியாக இருந்தால் தான் முடியின் நிறம் கருமையாக இருக்கும்.
Melaninல் இரண்டு வகை இருக்கிறது. Eumelanin மற்றும் pheomelanin ஆகும். இதில் Eumelanin அதிகமாக சுரந்தால் தான் நம் முடி கருமையாக இருக்கும். இது சுரப்பது சற்று குறைந்தால் முடி பிரவுன் நிறமாக மாறிவிடும். இதுவே Pheomelanin அதிகமாக சுரந்தால் முடி சிகப்பு நிறத்தில் இருக்கும். Melanin சுரக்கவில்லை என்றால் தான் முடி வெள்ளை நிறமாக இருக்கும்.
பொதுவாகவே சில பேருக்கு நாற்பது வயதுக்கு மேல் Genetics ரீதியாகவே நரைமுடி வரும். இதை எதுவும் செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். ஆனால், 25 முதல் 30 வயதிற்குள் இருப்பவர்களுக்கு வரும் இளம்நரைக்கு காரணம் Oxidative stress நம் உடலில் ஏற்படுவது தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அப்போது நம் உடலில் பரீ ரேடிக்கஸ் உருவாகும். இது நம் உடலில் உள்ள எல்லா செல்களையும் பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த பிரீ ரேடிகல்ஸை எதிர்த்து போராட ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள உணவுகள் தேவை. காலிபிளவர், பீட்ரூட், பாவக்காய், சியா விதைகள், சூரியகாந்தி விதைகள், almonds, walnut, ஆப்பிள், ஆரஞ்ச் போன்ற உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடும் போது ப்ரீ ரேடிக்கல்ஸூக்கு எதிராக நம் உடலை பாதுகாத்து இளநரை வருவதை தடுக்கும்.
இளநரை வருவதற்கு இன்னும் சில காரணங்களும் இருக்கிறது. தைராய்ட் பிரச்னை இருப்பது, அதிகமாக ஸ்ட்ரெஸ் ஆவதும், கோவப்படுவது போன்ற விஷயங்களால் cortisol என்ற ஹார்மோன் அதிகம் உற்பத்தியாக செய்து நரைமுடி வருவதற்கான வாய்ப்புகளை உண்டு பண்ணுகிறது. சரியான நேரத்திற்கு தூங்குவது, கோவத்தை கட்டுப்படுத்துவது இதை சரிசெய்ய உதவும்.
Junk food மட்டுமே சாப்பிட்டுக்கொண்டு காய்கறி பழங்களை தவிர்த்துவிடும் போது Iron, vitamin B12 போன்றவற்றில் குறைப்பாடு ஏற்படும். இதனாலும் நரைமுடி வருகிறது. இதை தவிர்த்து சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது நரைமுடி வராமல் தடுக்கலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)