
ஆஸ்துமா நோய் பிரச்னை உள்ளவர்கள் சில உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றினால் பிரச்சனையை தீர்க்கலாம். காலையில் பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். பல்துலக்கிய பின் முதலில் இரண்டு கப் வெதுவெதுப்பானநீர் அருந்தலாம். அதன் பிறகு பால் கலக்காத தேனீர் சிறந்தது. வெளுத்த பாலை விட கருமை தேனீர்/ காப்பி குடிப்பது நல்லது.
ஆஸ்துமா என்பது சுவாச அமைப்பில் உருவாகும் ஒரு நோயாகும். காற்று செல்லும் வழிகள் சுருங்குவதால் இது ஏற்படுகிறது.
ஆஸ்துமாவால் பெண்களை விட ஆண்கள் தான் பெரும்பாலும் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆஸ்துமா உள்ளவர்கள் குறைவாக உண்ண வேண்டும்.
அதிகமாக சாப்பிட்டால் அஜீரணமாகி வயிறு உப்புசம் ஆகி உடனே மூச்சு திணறல் வரும்.
மிகவும் குளிர்ந்த உணவு சாப்பிடக்கூடாது. சூடான உணவை சாப்பிட வேண்டும். இரவு சாப்பாடு மிக குறைவாக ஏழு மணிக்குள் சாப்பிட வேண்டும்.
இரவில் தயிர், பால் /குளிர்ந்த பானங்களை தவிர்க்கலாம்.
இரவில் கீரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பூண்டு சேர்த்த அரிசிக் கஞ்சி சாப்பிடலாம்.
பாலில் மிளகு தூள், மஞ்சள் தூள் சேர்த்து குடிக்கவும்.
கற்பூரவல்லி, துளசி, கரிசலாங்கண்ணி சில இலைகளை உதிர்த்துப் போட்டு கசாயமாக வைத்து வடிகட்டி தேன் சேர்த்து அருந்தலாம். இதனால் சளி விலகி சுவாசப் புத்துணர்ச்சி பெறும்.
கஞ்சி, சிவப்பரிசி அவல் உப்புமா, மிளகு ரச சாதம், இட்லி, தூதுவளை ரசம், திப்பிலி ரசம், முசு முசுக்கை அடை, முருங்கைக் கீரை பொரியல், மணத்தக்காளி வற்றல் ஜீரணத்தை வேகப்படுத்தி செரிக்கும் உணவுகளை சாப்பிடலாம்.
நீர்ச்சத்துள்ள காய்கறிகள், கிழங்கு வகைகள், எண்ணெய் சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.
தினமும் மாலையில் நாட்டு வாழைப்பழம், மலை வாழைப்பழம் , பகலில் சிறிது மாதுளை, அன்னாசி துண்டு சிறிது மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடலாம்.
இரவில் சுக்கு கஷாயம் சாப்பிடலாம்.