

நாம் ஆரோக்கியம் காக்க தினசரி பழங்களை எடுத்துக் கொள்கிறோம். அப்படி பழங்களை சாப்பிடும் பொழுது புழு இருந்தால் அதை தொட மாட்டோம். அதற்குள் ஏன் புழு வருகிறது. அதை சாப்பிட்டால் என்ன ஆகும். என்பதை இப்பதிவில் காண்போம்.
நாம் தினசரி பழங்கள் சாப்பிடுகிறோம் .ஒரு ஆரஞ்சு பழத்தை எடுத்து உரித்தோமானால் அதற்குள் இருக்கும் வெள்ளை பகுதியில் பார்த்தால் சில நேரம் புழுக்கள் நெளியும். அது சரி இல்லாத கெட்டுப்போன பழம் என்று குப்பையில் போட்டு விட்டு அடுத்த ஒன்றை எடுத்து சாப்பிடு வோம். இதுபோல் கொய்யா, சீதாப்பழம் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை என்று ஒவ்வொரு வகை பழங்களுக்கு தனித்தனியான பழ புழுக்கள் இருக்கின்றன.
இந்தப் பழப் புழுக்கள் எப்படி பழத்திற்குள் நுழைகிறது என்றால் பழங்கள் விற்கப்படும் மார்க்கெட்டில் ஒரு விதமான ரீங்காரம் விடும் பழ ஈக்களை காண முடியும் .அவை பழத்திற்குள் நுழைந்து முட்டையிட ஆரம்பிக்கிறது . அவை ஏன் பழத்திற்குள் நுழைகிறது என்றால், கொசு நம்மை கடிப்பது போலத்தான். அதன் மெல்லிய ஊசி போன்ற பகுதியை செலுத்தி நம் ரத்தத்தை உறிஞ்சுவது போல், பழ ஈக்களும் செயல்படுகின்றன.
காய் கடின தன்மையாக இருப்பதால் அதற்குள் ஈ அதன் வாயின் ஊசி போன்ற பகுதியை செலுத்த முடியாது உடைந்து விடும். அதனால் பழத்தை தேர்ந்தெடுத்து அதில் ஓட்டை போட்டு தன் முட்டையை இடுகின்றன. அது முட்டையை இடுவதன் காரணம் தாய் வயிற்றில் கரு வளரும் பொழுது அதற்கு எப்படி ஊட்டச்சத்து கிடைக்கிறதோ அதுபோல் அந்த லார்வாக்கள் வளர்வதற்கான ஊட்டச்சத்து பழத்தில் இருந்து கிடைக்கிறது என்பதால் தான்.
இப்படி செயல்படும் பழ ஈக்களை மூன்று வகையாக பிரிக்கலாம்
1.Bacterocera zonata
2.Bacterocera Dorsalis
3.Dorsophila
என்பவை தான் அவை.
இந்தப் பழ ஈக்கள் பழத்தின் மென்மையான பகுதியில் தன் ஊசி போன்ற பகுதியை செலுத்தி மூன்று நான்கு முட்டைகளை இட்டுச் செல்கின்றன. மூன்று நான்கு நாட்களிலேயே 500 முட்டைகளை இட்டு விடும் . இதே போல் பழங்களை இன்ஃபெக்ட் செய்யும் .அவை இரண்டு நாட்கள் கழித்து பார்த்தால் ரெண்டு மில்லி மீட்டர் அளவும், ஐந்து நாட்களில் பார்த்தால் ஐந்து மில்லி மீட்டர் அளவும் ,10 நாட்களில் ஒரு சென்டிமீட்டர்அளவு வளர்ந்து புழுக்களாக இருக்கும். 20 நாளில் பார்க்கும் பொழுது முழு ஈயாக வளர்ச்சி யுற்றிருக்கும். இவை எத்தனை நாட்கள் பழத்திற்குள் இருக்கிறதோ அவ்வளவு வளர்ச்சியுறும்.
இந்த ஈக்கள் பழ மரங்கள் நிறைந்துள்ள கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி ,ஹோசூர் ,தஞ்சாவூர் போன்ற பழத் தோட்ட தோட்டங்கள் நிறைந்த பகுதியில் பழங்கள் பழுக்க ஆரம்பிக்கும் போது சுற்றிக்கொண்டே இருக்கும். பின்னர் பழுத்த பழவகைகளை நாடி இது அதில் ஓட்டை போட ஆரம்பிக்கிறது. அப்படித்தான் இது மார்க்கெட்டுக்குள்ளும் நுழைகிறது.
பின்னர் இது போன்ற பழங்களை சாப்பிட்டால் என்ன ஆகும் என்ற கேள்வி நமக்குள் எழுவது இயல்பு தானே!
Maggots என்ற fruits fly விழுந்த பழங்களை தெரியாமல் ஓர் இரு முறை சாப்பிட்டால் பெரிதாக ஒன்றும் ஆகாது என்றாலும் அவ்வப்பொழுது தொண்டை அரிப்பு, தொண்டை கரகரப்பு, ஒவ்வாமை காரணமாக வயிற்றுப்போக்கு முதலியவை ஏற்படலாம்.
ஏன் அப்படி ஏற்படுகிறது என்றால் அந்த பழங்களில் புழு முட்டைகளோ , பழ பூச்சிகளின் ஓடுகளோ இருந்திருக்கலாம். அதை சாப்பிடும் பொழுது இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
மேலும் இந்த பழ ஈக்கள் கழிவுகள், குப்பை மேடுகள், விலங்குகளின் கழிவுகள், உணவுக் கழிவுகள் போன்ற பல்வேறு கழிவுகளில் உட்கார்ந்து சால்மொய்னா, ஈக்கோலி, ஈஸ்ட் போன்ற நோய் கிருமிகளை உண்டாக்குகிறது .அதே ஈக்கள் பழத்தில் உட்காரும்பொழுது நாம் அதை உட்கொண்டால் இந்த கழிவுகள் அதில் பரவி நமக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஆதலால் அது போன்ற பழங்களை சாப்பிடாமல் ஒதுக்குவது நல்லது.
வாங்கிய பழங்களை நன்றாக கழுவி அதன் தோலை எல்லாம் நீக்கிவிட்டு சாப்பிடுவது மிகவும் அவசியம்.
குறைந்த அளவு பழங்களை வாங்கி சாப்பிட வேண்டும்.
மேலும் பழத்தை வாங்கும் பொழுது பழத்தின் மேற்பகுதி பிரவுன் கலர் இல்லாமலும் கொஞ்சம் கடின தன்மை உடையதாக இருப்பதாகவும் பார்த்து வாங்க வேண்டும். பிரவுன் கலர் இருந்தால் அதில் கட்டாயமாக புழு இருக்கும் அதை மறைக்க ஊசி போட்டிருப்பார்கள். ஆதலால் அதை கட்டாயமாக தவிர்த்து விடவும்.
புளித்த வாடை மற்றும் கொத கொதப்பாக இருந்தால் அந்த பழத்தை வாங்க கூடாது. அதில் கட்டாயமாக புழுக்கள் இருக்கும்.
வாங்கிய பழங்களை உடனடியாக ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால் கெடாமல் இருக்கும். ஆரஞ்சு சுளைகளை ஒவ்வொன்றாக உதிர்த்து சிப்லாக் பையில் போட்டு வைத்து விட்டால் அதில் புழுக்கள் இருந்தாலும் மற்றவற்றில் பரவாமல் தடுக்கும்.
இதுபோல் பழத்தின் உள்ளே புழு ஏன் வருகிறது. அதை சாப்பிட்டால் என்ன ஆகும். எப்படி சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு சாப்பிட்டால் ஆரோக்கியம் காக்கலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)