சிறுநீரகக் கற்களை சுலபமாக கரைக்கலாம்... எப்படின்னு தெரிஞ்சுக்கலாம்!

Foods for kidney stones
Foods for kidney stones
Published on

1.கேரட், பாகற்காயில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவை சிறுநீரகக் கற்களைப் படியவிடாமல் தடுத்து, அவற்றைக் கரைக்கவும் உதவுகின்றன.

2.வாழைப்பழம், எலுமிச்சம்பழத்தில் உள்ள வைட்டமின் பி6, சிட்ரேட் ஆகிய சத்துகள், சிறுநீரகக் கற்களின் ஆக்சலேட் என்ற வேதிப்பொருளுடன் சேர்ந்து அதைச் சிதைத்து, படியவிடாமல் தடுக்கின்றன. சிறுநீரகக் கற்கள் உருவாகாமலும் தடை போடுகின்றன.

3. 5 அல்லது 6 பல் பூண்டு எடுத்து 1 கப் தண்ணீர் விட்டு அதில் கலந்து தேன் சேர்த்து கலக்கவும். பூண்டு நன்றாக வெந்ததும் அதை கலக்கி குடிக்க வேண்டும். தினமும் 1 அல்லது 2 முறை குடிக்க வேண்டும். சிறுநீரக கற்கள் மாயமாகி விடும்.

4. அன்னாசிப் பழத்தில் சிறுநீரகக் கற்களின் ‘பைப்ரினை’ சிதைக்கும் நொதிகள் உள்ளன. எனவே, இப்பழம் எளிதில் சிறுநீரகக் கற்களைக் கரைக்கும்.

5. கொள்ளு, பாதாம் பருப்பு, பார்லி, ஓட்ஸ் போன்றவையும் சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்கும்.

6. மா இலைகள் சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்களை கரைக்க கூடியது. தினமும் மா இலை பொடியை நீரில் கரைத்து இரவு தூங்குவதற்கு முன் குடித்து வந்தால் விரைவில் சிறுநீரக கற்கள் கரைத்து வெளியேற்றப்படும்.

7. சிறுநீரகக் கல் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் இளநீர் குடிக்க வேண்டும். அதோடு, சிட்ரஸ் பழச்சாறுகள், வாழைத்தண்டுச் சாறு போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

8. சிறுநீரகக் கல்லால் தவிப்பவர்கள் காபி, டீ, பிளாக் டீ, சோடா, செயற்கை குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். அன்றாடம் சாப்பிடும் உணவில் உப்பு, புளி, காரம், மசாலா ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

இதையும் படியுங்கள்:
ஸ்வீட் பொட்டேட்டோ கோகோநட் கேக் ரெசிபி!
Foods for kidney stones

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com