லெமன் டீ குடிப்பது உடலுக்கு நன்மை பயக்கும் விஷயமாகும். இது எப்போதும் உங்களை புத்துணர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. எலுமிச்சையில் பல விட்டமின்கள் மற்றும் ஏராளமான சத்துக்கள் உள்ளன. எலுமிச்சையில் வைட்டமின் சி, ஃபோலேட், கால்சியம், இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம், மாங்கனீஸ், புரதம் மற்றும் ஆக்ஸிஜனேற்றம் போன்ற தாதுக்கள் உள்ளன.
வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது. எலுமிச்சை செரிமானம், நீரிழிவு கட்டுப்பாடு, இதய ஆரோக்கியம் மற்றும் எடை இழப்புக்கு பயன்படுத்தப்படுகிறது.
எலுமிச்சம்பழத்தை ஜூஸாகவும், ஊறுகாயாகவும், லெமன் டீ யாகவும் , எலுமிச்சை சாதம், பிரியாணி, மற்றும் பலவித பதார்த்தங்களுடன் சேர்த்து சாப்பிடுகிறோம். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள விரும்பும் பலரும் லெமன் டீயை முதன்மை விருப்பமாக வைத்துள்ளனர். லெமன் டீ சில வயிறு சார்ந்த உபாதைகளுக்கு நல்லது. ஆனால் எலுமிச்சம்பழத்துடன் சில உணவுகளை சாப்பிடுவது குடலுக்கும் வயிற்றுப் பகுதிக்கும் சில பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
எலுமிச்சையில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும் எலுமிச்சையின் வேதியியல் பண்புகள் காரணமாக ஒரு சில உணவுகளை தவிர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது. எலுமிச்சை ஒரு சிட்ரஸ் ஆசிட் நிறைந்த பழமாகும். சில பொருட்களுடன் சிட்ரஸ் ஆசிட் வேதி வினை புரியும். ஆசிட்டில் அமிலப் பண்பு அதிகம், அதனால் தான் அது சட்டையின் கரைகளை போக்குகிறது, பாத்திரங்களை பளபளப்பாக வைக்கிறது.
எலுமிச்சை டீ குடிப்பவர்கள் சில உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
லெமன் டீ குடித்து சிறிது நேரத்தில் பால் குடிப்பதும், பால் சேர்க்கப்பட்ட இனிப்பு வகைகள், பன்னீர் சேர்த்து உணவு வகைகளை சாப்பிட்டாலும் உடனடியாக செரிமானம் ஆகாது. உள்ளே சென்ற பால் சிட்ரிக் ஆசிட் உடன் வேதி புரிந்து திரி திரியாக உங்களுக்கு எதுக்களிக்கும்; புளித்த ஏப்பமும் வந்து கொண்டே இருக்கும். சிலருக்கு உடனடியாக வாந்தி வரும். மேலும் இது வாயுவை ஏற்படுத்தி அங்கங்கே வலிகளையும் உண்டாக்கும். இதனால் அவற்றை தவிர்ப்பது நலம்.
எலுமிச்சை கொழுப்பைக் கரைக்கும் பண்பு உள்ளது. எண்ணெயின் நிறைய கொழுப்பும் டிரைகிளிசராய்டும் இருப்பதால், எலுமிச்சையின் கொழுப்பைக் குறைக்கும் பண்புகள் தற்காலிகமாக செயல்படாது. இரைப்பையில் இரண்டும் சேராமல் செரிமானதத் தாமதமாக்கும். எண்ணெய் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் நிறைந்த உணவுகளுடன் லெமன் டீ சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
எலுமிச்சை தேநீருடன் இனிப்பு வகைகளை உண்ணக் கூடாது. அவை உடனடியாக செரிமான மண்டலத்தை வேலை செய்ய விடாது. மேலும் இனிப்பு எலுமிச்சையின் நல்ல பண்புகளை அழித்து விடும். சிட்ரிக் ஆசிட் உடம் சர்க்கரையில் உள்ள ஆசிட் வினை புரியும் போது பொதுவாக அமிலத் தன்மை அதிகமாகிறது.
புளிப்பு சுவையுடன் வெங்காயம், வெள்ளரிக்காய் போன்றவை உட்கொண்டால் அவை உடனடியாக செரிமானம் ஆகாது. தக்காளியில் அமிலத்தன்மை உள்ளதால் சிட்ரிக் ஆசிட்டுடன் சேர்ந்து இரைப்பையில் அதிக அளவு அமிலத் தன்மையை ஏற்படுத்தும். இது வயிறை புண்ணாக்கும்.