Business 
பொருளாதாரம்

வியாபாரம் பண்ணறீங்களா? இந்த மந்திர தந்திரமெல்லாம் ரொம்ப முக்கியமுங்க!

வாசுதேவன்

நான்கு நாட்களில் திருவிழா, சற்று தூரத்தில் உள்ள கிராமத்தில். பலர் கூடுவார்கள். சரியான சந்தர்ப்பம் பொருட்களை விற்பனை செய்ய.

வருபவர்கள் விரும்பி வாங்கி செல்லும் மண் பொம்மைகளில் குறிப்பாக குதிரை பொம்மைகளுக்கு தனி டிமாண்ட். எனவே கிட்டத்தட்ட 450 பொம்மைகள் செய்ய திட்டமிட்டிருந்தான், அந்த குறிப்பிட்ட வியாபாரி. எதிர் பாராமல் அவருக்கு உடல் நலம் சரியில்லாததால், அவர் மகன் அந்த வேலையை செய்வதாக உறுதி அளித்தான்.

கடந்த மூன்று வருடங்களாக அவர் மகனும் பொம்மைகள் தயார் செய்ய பழகி வந்து இருந்தான். எனவே அவனிடம் இந்த வேலை ஒப்படைக்கப் பட்டது. அவனும் மும்முரமாக தயார் செய்து, அவைகளுக்கான வர்ணம் பூசி விட்டு அவற்றை வெயிலில் காய வைத்து இருந்தான். அந்த பக்கமாக வந்த அவன் தந்தைக்கு அந்த பொம்மைகளைப் பார்த்ததும் ஷாக் அடித்தார் போல் தூக்கி வாரிப் போட்டது. அவர் மகன் கவனக் குறைவால் குதிரை பொம்மைகளுக்கு பதிலாக கழுதை பொம்மைகளை தயார் செய்து விட்டான்.

அந்த திருவிழாவுக்கு வருபவர்கள் வாங்கி செல்வது குதிரை பொம்மைகள் மட்டும் தான். என்ன செய்வது. போதிய நேரம் இல்லை, புதிதாக தயார் செய்ய. இருந்த பணத்தை இந்த பொம்மைகள் தயார் செய்ய பயன் படுத்தியாகி விட்டது. கவலையும், டென்ஷனும் கூடின. என்ன செய்வது என்று புலப்படவில்லை.

அப்பொழுது அங்கு வந்த அவரது மனைவியின் தம்பி விஷயத்தை கேட்டு அறிந்துக் கொண்டான் நிலைமையை. தான் எல்லா பொம்மைகளையும் விற்று தருவதாக உத்தரவாதம் அளித்தான். போனில் யார் யாரோடோ பேசினான். திருவிழா தொடங்கிய அன்று சுமார் 3 மணி நேரத்துக்குள் அத்தனை பொம்மைக்களையும் நல்ல விலைக்கு (இவர் நிர்ணயித்து வைத்து இருந்த விலைக்கு அதிகமாகவே) விற்று நல்ல லாபம் வேறு ஈட்டி கொடுத்தான். இவர் அசந்து போய் மகிழ்ச்சியில் திகழ்ந்தார்.

அப்படி என்ன மாயம் செய்யப்பட்டது?

பொது மக்கள் வரும் வழியில் கடை வைத்து அங்கு இந்த கழுதை பொம்மைகள் நிற்க வைக்கப்பட்டன. அங்கு வந்த நபர்கள் ஆர்வத்துடன் பார்த்து விட்டு விசாரிக்க ஆரம்பிக்க, இவன் தனது பேச்சு திறமையை உபயோகித்தான்.

"கவனித்தீர்களா! இங்கு மட்டும் தான் இந்த வகை கழுதை பொம்மைகள் கிடைக்கும். இந்த பொம்மைகள் அந்த மலையில் இருக்கும் சாமியாரின் அருள் ஆசியுடன் ஸ்பெஷாலாக தயார் செய்யப் பட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கைகளே தயாரிக்கப் பட்டவை. இதை வாங்கி நம்பிக்கையோடு வீட்டில் வைத்தால் எல்லாவகை நன்மைகள் கிட்டும்", என்று கூறி விட்டு சிறிது நிறுத்தினான்.

அப்பொழுது அங்கு வேகமாக வந்த இரண்டு மோட்டார் பைக்கில் இருந்த நால்வரில் ஒருவர்,"அப்பாடா..! நல்ல வேளை அந்த சாமியார் அருளிய அந்த பொம்மைகள் இங்கே இருக்கின்றன. நாம் அதிர்ஷ்டம் செய்தோம்..!" என்று கூறிக் கொண்டே அவனை நெருங்கினார். உடன் வந்தவர்கள் முகங்களிலும் தாங்கள் தேடிய பொருள் கிடைத்த மகிழ்ச்சி தென்பட்டது.

உடனே அவன், "முதலில் இவர்கள் தான் வந்தார்கள். அவர்களுக்கு தான் முதல் உரிமை!", என்று பில்ட் அப் கொடுத்தான். வந்தவர்கள் வாங்க ஆர்வம் காட்டினார்கள். கேட்க வேண்டுமா வெகு விரைவில் எல்லா பொம்மைகளும் சேல்ஸ் ஆகி விட்டன.

வீட்டில் அவனது வியாபார தந்திரத்தை விளக்கினான்:

என்னுடைய நண்பர்கள் சிலரை முதலில் வந்து விசாரிக்க சொன்னேன். அடுத்து மோட்டார் பைக்குகளில் வந்தவர்களும் என் நண்பர்க்களே. அவர்கள் வந்து பேசிய விதம் டிமான்ட் அதிகரிக்க செய்ய. நானும் தொலை தூரத்தை சார்ந்தவன். அதற்காகவே உங்கள் யாரையும் வியாபாரம் செய்யும் இடத்திற்கு வர வேண்டாம் என்றேன். சந்தர்ப்பத்திற்கு ஏற்ப யோசித்து செயல் பட வேண்டியது முக்கியம் வியாபாரத்தில். அதை தான் கடைப் பிடித்தேன் என்றான் சிரித்துக் கொண்டே!

இது என்னது, வித்தியாசமான ரெசிபியா இருக்கே? ஆனா செம டேஸ்ட்! 

இந்த மூலிகையைப் பயன்படுத்தினால் உங்க முடியின் ஆரோக்கியம் வேற லெவலுக்கு மாறும்! 

அவசரத்துக்குக் கைக்கொடுக்கும் சில எளிய பாட்டி வைத்தியக் குறிப்புகள்!

உங்களை நாய் கடித்துவிட்டால் பதற வேண்டாம்… இவற்றை சரியாக செய்தாலே போதும்! 

தலைக்கு சீயக்காய் பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

SCROLL FOR NEXT