எஸ்.டி வரி வசூல் 
பொருளாதாரம்

நாட்டில் ஜி.எஸ்.டி வரி வசூல் அதிகரிப்பு!

க.இப்ராகிம்

டப்பு நிதியாண்டிற்கான ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த ஆண்டை விட 15 சதவீதம் உயர்வைக் கண்டிருப்பதாக நிதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருகிறது. இவற்றை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பிரித்துக் கொள்கின்றன. இந்த நிலையில் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டது. முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜிஎஸ்டி வரி வசூல் வியக்கத்தக்க அளவில் முன்னேற்றத்தை கண்டு வருவதாக இந்திய நிதி அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

அதிலும் நடப்பு காலமான 2023 -24 ஆம் நிதியாண்டின் நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் 1.68 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. இது கடந்த நிதியாண்டின் அதே காலகட்டத்தை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது 15 சதவீதம் வளர்ச்சியாகும்.

2017-18 நிதியாண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாயாக இருந்த ஜிஎஸ்டி வரி வசூல், கொரோனா காலகட்டத்தில் உயர்வை கண்டது. அதன் பிறகு 2022 - 23 ஆம் நிதி ஆண்டில் 1.51 லட்சம் கோடி ரூபாயாக உயர்வை சந்தித்தது. தற்போது மேலும் 15 சதவீதம் உயர்வை சந்தித்து உள்ளது. மேலும் ஜிஎஸ்டி வரி வசூல் இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுகிறது.

மேலும் மாதாந்திர ஜிஎஸ்டி வரி வசூல் தொகையும் அதிகரித்து வருகின்றன. நடப்பு நிதியாண்டின் அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் நம்பிக்கை அளிப்பதாக இருந்தது, நவம்பர் மாதத்தில் சிறிய சரிவை சந்தித்தது. ஆனாலும் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்து இருக்கிறது என்று ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT