Mistakes to avoid while buying a mobile on EMI! 
பொருளாதாரம்

EMI-ல் மொபைல் வாங்கும்போது செய்யக்கூடாத தவறுகள்!

கிரி கணபதி

மொபைல் போன் இல்லாமல் நம்மால் இருக்கவே முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டோம். அதுவும் அடிக்கடி ஸ்மார்ட்போன்களை மாற்றுவது பலருக்கு வாடிக்கையாகிவிட்டது. ஆனால், அனைவராலும் ஒரே நேரத்தில் புதிய மாடல்களை வாங்க முடியாது. இதனால், பெரும்பாலானோர் EMI திட்டத்தின் மூலம் மொபைல் ஃபோன்களை வாங்குகின்றனர்.‌ EMI-ல் மொபைல்போன் வாங்குவது ஒரு வசதியான வழிமுறையாக இருந்தாலும் இதில் நாம் செய்யும் சில தவறுகள் நம்மை பெறும் இழப்பிற்கு உள்ளாக்கிவிடும். 

EMI-ல் மொபைல் வாங்கும்போது செய்யக்கூடாத தவறுகள் பற்றி இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

EMI-ல் மொபைல் வாங்கும்போது செய்யக்கூடாத தவறுகள்: 

EMI-ல் மொபைல் வாங்கும் முன் தங்கள் மாத வருமானத்தை கணக்கிட்டு, மொபைல் வாங்க செலவழிக்கக்கூடிய தொகையை முடிவு செய்ய வேண்டும். இதன் மூலம் தங்களால் எவ்வளவு காலத்திற்கு EMI செலுத்த முடியும் என்பதை அறிந்து கொள்ளலாம். 

ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்குவார்கள். எனவே, குறைந்த வட்டி விகிதத்துடன் கூடிய EMI திட்டத்தை தேர்வு செய்வது நல்லது. மேலும் வட்டி விகிதத்துடன் கூடுதலாக பிற கட்டணங்கள் எதுவும் உள்ளதா என்பதையும் கவனமாக தெரிந்து கொள்ள வேண்டும். 

EMI கால அளவு நீண்டதாக இருந்தால், செலுத்த வேண்டிய மொத்த தொகை அதிகமாக இருக்கும். எனவே, தங்களால் எவ்வளவு காலத்திற்கு EMI செலுத்த முடியும் என்பதை கருத்தில் கொண்டு, கால அளவை தேர்வு செய்யவும்.‌ 

உங்களுக்கு எதுபோன்ற அளவிலான மொபைல் இருந்தால் போதும் என்பதை முடிவு செய்து பிறகு மொபைல் வாங்க வேண்டும். அதிக விலையுள்ள மொபைல் வாங்கி அதன் அனைத்து வசதிகளையும் நீங்கள் பயன்படுத்தாமல் போனால் வீண் செலவுதான். 

EMI திட்டத்தை தேர்வு செய்யும் முன் பல்வேறு நிறுவனங்களின் திட்டங்களை ஒப்பீடு செய்து பார்க்க வேண்டும். மேலும், மொபைல் தொடர்பான ரிவியூகளை படித்து, உங்களுக்கு தெரிந்தவர் யாரேனும் அதே மொபைலை வாங்கி இருந்தால் அவர்களிடம் கேட்டு அறிந்துகொள்ள வேண்டும். 

புதிதாக மொபைல் வாங்கும்போது பல நிறுவனங்கள் மொபைல் காப்பீட்டை கட்டாயமாக்குகின்றன. காப்பீடு பற்றிய விவரங்களை கவனமாகப் படித்து உங்களுக்கு தேவையென்றால் மட்டுமே காப்பீடு திட்டங்களை எடுப்பது நல்லது. 

EMI ஒப்பந்தத்தில் சில முக்கியமான விஷயங்கள் சிறிய அளவில் எழுதப்பட்டிருக்கும். அவற்றை கவனமாகப் படித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் நிறுவனத்தை தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொண்டு வாங்க வேண்டும். 

ஒருவேளை நீங்கள் தவறுதலாக EMI செலுத்துவதை மறந்தால், கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும். எனவே, ஒவ்வொரு மாதமும் EMI தானாக வங்கிக் கணக்கில் இருந்து போய்விடும்படி ஆட்டோ டெபிட் வசதியை பயன்படுத்துங்கள்.  

ஏற்கனவே உங்களுக்கு பிற கடன்கள் இருந்தால் EMI திட்டத்தில் மொபைல் வாங்குவது உங்களது கடன் சுமையை அதிகரிக்கும். எனவே உங்களால் EMI எளிதாக செலுத்த முடியுமா என்பதை கவனமாக சிந்திக்க வேண்டும். 

EMI செலுத்தும்போது எதிர்பாராத செலவுகளுக்கு பணம் ஒதுக்கி வைப்பது அவசியம். எமர்ஜென்சி நிதி இல்லாமல் EMI பணம் செலுத்த முடியாமல் போனால், கடன் பிரச்சனை அதிகரிக்கக்கூடும். 

எனவே இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, EMI-ல் மொபைல் வாங்கலாமா வேண்டாமா என்பதை முடிவெடுக்கவும். மேற்கண்ட தவறுகளைத் தவிர்த்து கவனமாக திட்டமிட்டு மொபைல் வாங்கினால், நாம் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாக இருக்க முடியும். 

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT