New council to streamline freight transport. 
பொருளாதாரம்

சரக்கு போக்குவரத்தை சீரமைக்க புதிய கவுன்சில்!

க.இப்ராகிம்

சரக்கு போக்குவரத்தை சீரமைக்கப் புதிய குழுக்களை அமைக்க டிட்கோ முடிவு.

தமிழ்நாடு அரசு 2030-ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் அதாவது 83 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயித்து பயணித்துக் கொண்டிருக்கிறது. இதற்காக சவாலான துறைகளுடைய செயல்பாடுகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் போக்குவரத்து துறையை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக போக்குவரத்து துறை சார்ந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுடன் அரசு வலுவான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி கட்டமைப்பை விரிவு படுத்த நடவடிக்கை எடுத்து இருக்கிறது. அதே சமயம் நாட்டின் பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டின் துறைமுகம், விமானம், ரயில், சாலை போக்குவரத்து என்று அனைத்து போக்குவரத்து வழித்தடங்களும் சிறப்பான சேவையை அளித்து வருகின்றன. ஆனாலும் அவற்றில் உள்ள ஒரு சில பிரச்சனைகளை தீர்த்து சரக்கு போக்குவரத்தை விரிவுபடுத்த தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமான டிட்கோ முயற்சி எடுத்து வருகிறது.

இதற்காக 31 தனியார் நிறுவனங்களின் கூட்டமைப்பை ஒருங்கிணைத்து லாஜிஸ்டிக் கவுன்சிலை அமைக்க முடிவு செய்திருக்கிறது. மேலும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில், 28 அரசுத்துறை செயலாளர்களை உள்ளடக்கிய உயர்மட்ட குழு அமைக்கவும், நெட்வொர்க் பிளானிங் குரூப் எனப்படும் 42 அரசு துறை நிறுவனங்களை உள்ளடக்கிய குழு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த சரக்கு போக்குவரத்து துறையில் ஏற்படுத்த வேண்டிய முன்னேற்றம் குறித்தும், துறைமுகங்கள் சந்திக்கும் கடுமையான நெரிசலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை மற்றும் தமிழ்நாட்டின் சாலை விரிவாக்க உள்ள கால தாமதங்களை தடுத்து துரிதப்படுத்தவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து திட்டம் வகுக்கப்பட உள்ளது.

தண்ணீர் குடிப்பதற்கு இத்தனை விதிமுறைகளா? இது தெரியாம போச்சே!

சீதையின் அருள் பெற்ற அனுமன்!

அட, இப்படி ஒரு முறை தயிர் பச்சடி செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க! 

பெற்றோர்கள் பெறும் விவாகரத்து; பிள்ளைகளுக்குத் தரும் தண்டனை!

ஸ்கிசோஃப்ரினியா காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள்!

SCROLL FOR NEXT