வங்கியை விட அதிக வட்டி கொடுக்கும் அசத்தலான PO RD ஸ்கீம்..!
நாம் சம்பாதிக்கும் பணத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை சேமித்து வைப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒரு சிலர் வங்கி கணக்கில் சேமிப்பார்கள், சிலர் தங்கத்தில் முதலீடு செய்வார்கள். மொத்தத்தில் சேமிப்பு என்பது அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாகும்.
அந்த வகையில், போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் (RD) ஒரு சிறந்த சேமிப்பு திட்டமாகும். இந்த (RD) ஸ்கீமில் மாதம் தோறும் சிறு தொகையை முதலீடு செய்வதன் மூலம், முதிர்வு காலத்திற்குப் பிறகு முதலீடு செய்த பணத்திற்கு ஏற்றவாறு அதிக வட்டியில் பணத்தை பெற முடியும். நாம் குறைந்தது ரூ.1000 முதல் ரூ.10000 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தினால், வட்டியுடன் சேர்த்து முதிர்வு காலத்திற்கு பிறகு எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
PO RD ஸ்கீம்:
இந்த ஸ்கீம் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் தபால் அலுவலகத்தால் வழங்கப்படும் ஒரு சிறு சேமிப்பு திட்டமாகும். இந்தத் திட்டத்தில் குறைந்த அளவிலான பணத்தை முதலீடு செய்வதன் மூலம் அதிக அளவில் வட்டியுடன் நம்மால் நிதி பெற முடியும். நீங்கள் மாதந்தோறும் ஒரு சிறிய பணத்தை முதலீடு செய்ய விரும்பினால் உங்களுக்கு இந்த PO RD ஸ்கீம் ஒரு நல்ல தேர்வாக அமையும்.
RD சேமிப்பு திட்டத்தின் புதிய மாற்றம்:
மத்திய நிதி அமைச்சகம் செப்டம்பர் 29, 2023 அன்று சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மாற்றி அமைத்தது. அதன் அடிப்படையில் தபால் அலுவலக RD மீதான வட்டி விகிதத்தை 6.5% இருந்து 6.7 சதவீதமாக உயர்த்தி இருக்கிறது. மேலும் இந்த வட்டி விகிதம் கடந்த அக்டோபர் 1, 2023 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இது இன்னும் அடுத்த ஐந்து ஆண்டு காலம் முழுவதும் இதே வட்டி விகிதத்தில் இருக்கும். இதனால் நாம் சேமிக்கும் முதலீட்டிற்கு அதிக வட்டியுடன் நிதியை திரட்ட முடியும்.
இந்த ஆர் டி ஸ்கீமின் கால அளவு ஐந்தாண்டுகள் ஆகும். மேலும் நீங்கள் சேமிக்கும் கணக்கை மற்றொரு தபால் அலுவலகத்திற்கு மாற்றம் செய்து கொள்ள முடியும்.
மாதம் முதலீடு செய்யும் தொகை மற்றும் வட்டியுடன் கிடைக்கும் தொகை:
இந்த RD ஸ்கீமில் குறைந்தபட்ச முதலீடு தொகையாக ரூபாய் 100 செலுத்தி கொள்ளலாம். மேலும் உங்களின் சேமிப்பிற்கு ஏற்றவாறு மாதம் தோறும் அதனை அதிகப்படுத்தி கொள்ளலாம். உதாரணமாக நீங்கள் ரூபாய் 500 செலுத்தி கணக்கை தொடங்க விரும்பினால் நீங்கள் மாதந்தோறும் 500 ரூபாய் முதலீடு செய்யலாம் அல்லது 500க்கும் அதிகமான தொகையை முதலீடு செய்யலாம்.
மாதம் ரூபாய் 1000 செலுத்தி வந்தால் ஐந்து ஆண்டுகள் முடிவில் மொத்த முதலீடாக 60,000 பெற முடியும். இதற்கு வட்டியாக ரூ.11,365 கிடைக்கும். இதனை சேர்த்து ஐந்து ஆண்டுகள் முடிவில் முதிர்வு தொகையாக ரூ.71,365 பெறலாம்.
மாதம் ரூபாய் 3000 செலுத்தினால் ஐந்தாண்டுகள் முடிவில் ரூ.1,80,000 முதலீடு செய்து இருப்பீர்கள். இதற்கு வட்டியாக ரூ.34,097 ரூபாய் கிடைக்கும். ஐந்தாண்டுகள் முடிவில் ரூ.2,14,097 கிடைக்கும்.
மாதம் ரூபாய் 5000 செலுத்தி வந்தால் ஐந்தாண்டுகள் முடிவில் ரூ.3,00,000 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள். இதற்கு வட்டியாக ரூ.56,829 கிடைக்கும். ஐந்து ஆண்டுகளில் முடிவில் முதிர்வு தொகையாக ரூ.3,56,829 கிடைக்கும்.
மாதம் ரூபாய் 10,000 செலுத்தி வந்தால் ஐந்தாண்டுகள் முடிவில் ரூ.6,00,000 செலுத்தி இருப்பீர்கள். வட்டியாக ரூ.1,13,652 ரூபாய் கிடைக்கும். ஐந்தாண்டுகள் முடிவில் முதிர்வு தொகையாக ரூ.7,13,658 ரூபாய் கிடைக்கும்.