இன்று பெரும்பாலானோர் உபயோகிக்கும் பதம் 'Startup' புதிது ஒன்றும் இல்லை என்பதை விளக்கும் நிகழ்வு.
ஸ்டார்ட் அப் துவக்க தேவையானவை துணிவு, தன்னம்பிக்கை, உழைப்பு, தொய்வு இல்லாத முயற்சி. இவையாவும் தொழில் துவங்க முற்படுபவரின் அர்ப்பணிப்பில் இருந்து வர வேண்டும்.
எண்ணுவதோடு அல்லாமல் செயல் படுத்தினால் தான் ரிசல்ட் தெரியும். செயல் படுத்துவதும், ஒரு வகை உந்துகோல் (implementing also will serve as motivating factor) என்பது உண்மை.
பல வருடங்களுக்கு முன்பு பெரிய நகரங்களில் கால் பதித்த அடுக்கு மாடி குடியிருப்பு, கிராம பக்கங்களை சார்ந்துள்ள நகரங்களை குறி வைத்து நகர துவங்கிய கால கட்டம்.
அந்த கிராமத்தில் பிறந்து நிலங்களில் உழைத்து, சுமாராக படித்த அவர் உலக நடப்புக்களை அறிந்து வைத்து இருந்தார். எப்பொழுதும் அடுத்து என்ன செய்யலாம், என்ற சிந்தனையில் இருந்தவருக்கு, வரப் பிரசாதம் போல் சந்தர்பம் அவரது கண்களுக்கு தென் பட்டது.
புகழ் பெற்ற ஒரு நிறுவனம் , அவர் கிராமத்தின் அருகில் ஒரு அடுக்கு மாடி கட்டிடம் கட்ட ஆரம்பித்ததார்கள். இவர் யோசித்தார். எப்படி இந்த சந்தர்ப்பம் அவருக்கு சாதகமாக அமைந்து அவரது பொருளாதாரத்தை உயர்த்தும் என்று.
ஐடியா பிறந்தது. அவர் மனைவியுடன் கலந்து ஆலோசித்தார். மேலும் விவரங்கள் கிடைத்தன.
அந்த கட்டிடம் கட்டி முடிக்க ஒரு வருடம் ஆகும். பிரபல நிறுவனம் என்பதால் கட்டும் பொழுதே விற்று விடும், அவ்வளவு பிளாட்ஸ் ( Flats) களும். தொடர்ந்து குடியேறி மனிதர்கள் நடமாட்டம், தங்குவது அதிகரிக்கும். முதலில் முந்திக் கொள்ள வேண்டும்.
இருவரும் திட்டம் வகுத்தனர். கட்டிடம் கட்ட ஆரம்பத்திதிலிருந்து அவர்கள் தொடங்க போகும் சிறிய தொழிலுக்கு டிமாண்ட் இருக்கும் என்று நம்பினார்கள்.
துணிந்து இறங்கினார்கள். வெற்றி அடைந்தார். ஆம். அவர் துவங்கியது , சிறிய டீ கடை.
அங்கு அந்த கட்டிடம் கட்டும் தொழிலாளிகளுக்கும், கட்டிடத்தை வந்து பார்வையிடுபவர்களுக்கும் அக்கம் பக்கத்தில் எந்த வசதியும் அப்பொழுது இல்லை.
இவர் துவங்கிய டீ கடையின் டீ நன்றாக இருந்தது. பாலுக்கு பஞ்சமில்லை. அவரிடமே சில மாடுகள் இருந்தன. அதிகம் தேவை என்றால் அவர் கிராமத்தில் கிடைக்கும்.
வந்து போவதற்கு அவரும் அவர் மனைவியும் ஆளுக்கு ஒரு சைக்கிள் உபயோகித்தனர். சுத்தத்திற்கு (cleanliness) மிக முக்கியத்துவம் அளித்தார்.
விலை சிறிது அதிகம் என்றாலும், அவர் கொடுக்கும் டீயினால் கிட்டும் நன்மைகளால் வியாபாரம் நன்றாக நடைப் பெற்றது.
நாட்கள் செல்ல செல்ல கட்டிடம் ரெடியாகி flats வாங்கியவர்கள் குடியேற ஆரம்பித்ததும், இவர் தனது வியாபாரத்தை விஸ்தரிக்க முடிவு செய்து செயல்பட்டு வெற்றி பெற்றார்.
அங்கு குடி வந்தவர்களுக்கு தேவையான பசும் பால், எருமை பால் சப்ளை செய்ய முன் வந்து, மாடுகளை கிராமத்தில் இருந்து ஓட்டி வந்து வடிக்கையாளர்களுக்கு எதிரில் கறந்து கொடுத்து வியாபாரத்தை விஸ்தரித்தார்.
செய்த தொழிலில் நாணயத்தை கடைப் பிடிப்பதை கொள்கையாக வைத்து பின்பற்றினார். நல்ல பெயர் எடுத்து நம்பிக்கைக்கு பாத்திரம் ஆனார். தன்னம்பிகையயோடு இருவரும் உழைத்தனர்.
டீ, பால் வியாபாரம் உடன் அவர்கள் வயலில் விளையும் fresh ஆன காய்கறிகளையும் supply செய்து, கொஞ்சம் கொஞ்சமாக சூழ்நிலைக்கு தோதாக அவரது சிறிய பிசினசை மேலும் வளர வழி வகுத்து வெற்றியும் பெற்றார்.
இந்த நிகழ்வு கற்பிக்கும் சில பாடங்கள்:
சிறுக சிறுக முன்னேறினால் வலுவான அடித்தளம் ( strong basement possible ) அமைக்க முடியும்.
அதிக ஆசைபட்டு அவதி படாமல், அமைதியான முறையில் நம்பிக்கை வளர்த்து முன்னேறுவது சாலச் சிறந்தது.
அறிந்த தொழிலில் கால் பதிப்பது புத்திசாலித்தனம்.
முயற்சி, தன்னம்பிக்கை, துணிவு, உழைப்பு ஆகியவை தொடரும் மூலதனமாக இருந்தால் வெற்றி கூடவே பயணிக்கும்.