Who owns the unclaimed billions in banks?
Who owns the unclaimed billions in banks? 
பொருளாதாரம்

வங்கிகளில் உரிமை கோரப்படாத பல்லாயிரம் கோடி யாருக்கு சொந்தம்?

க.இப்ராகிம்

வங்கிகளில் உரிமை கோரப்படாமலும் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களால் பயன்படுத்தப்படாமலும் உள்ள 42,270 கோடி ரூபாய் தொகை குறித்து விளக்கம் கேட்டுள்ள வங்கிகள்.

இந்தியாவில் பணம் வெளியிடுதல் மற்றும் வங்கிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. ரிசர்வ் வங்கியின் கீழ் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கி, நாட்டுடைமை ஆக்கப்படாத வங்கி, தனியார் வங்கி, கூட்டுறவு வங்கி, வெளிநாடு வங்கிகள் என்று பல வங்கிகள் செயல்படுகின்றன.

இவற்றில் இந்தியாவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் வங்கிகளில் மட்டும் நீண்ட ஆண்டு காலமாக உரிமை கூறப்படாமல், பயன்படுத்தப்படாமல் பல்லாயிரம் கோடி ரூபாய் பணம் டெபாசிட் தொகையாக இருப்பில் உள்ளது. இந்த தொகைகள் ஒவ்வொரு ஆண்டும் கணிசமான அளவு உயர்ந்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது.

இந்த நிலையில் 2021 - 22 ஆம் நிதியா ஆண்டில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் டெபாசிட் செய்து உரிமை கோரப்படாமல், பயன்படுத்தப்படாமல் இருந்த தொகைகளின் மதிப்பு 32, 934 கோடி ரூபாய் ஆகும். இவை ஒரே ஆண்டில் 28 சதவீதம் உயர்வை கண்டிருக்கிறது. தற்போது 2022 - 23 ஆம் நிதி ஆண்டில் மார்ச் மாத கையிருப்பு தொகையாக 42,270 கோடி ரூபாய் கண்டறியப்பட்டு இருக்கிறது. இவற்றில் பொதுத்துறை வங்கிகளில் மட்டும் 36, 184 கோடி ரூபாய் தொகையும், தனியார் துறை வங்கிகளில் 6, 087 கோடி ரூபாய் தொகையும் இருப்பு உள்ளது. இவற்றில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உரிமை கூறப்படாத தொகையின் மதிப்பு 50 சதவீதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் நீண்ட ஆண்டு காலமாக உரிமை கோரப்படாத, பயன்படுத்தப்படாத தொகைகளை மற்றும் அவற்றின் மூலம் கிடைக்கும் லாபங்கள் ஆகியவற்றை எவ்வாறு பயன்படுத்துவது, பங்கிடுவது என்று வங்கிகள், ரிசர்வ் வங்கிகளிடம் விளக்கம் கேட்டுள்ளன.

உங்கள் திறமைகளை வெளிக்காட்டத் தயங்காதீர்கள்!

நீரிழிவு எச்சரிக்கை: இந்த 5 பழக்கங்கள் இருப்பவர்கள் ஜாக்கிரதை!

Mammoth Cave: உலகின் மிகவும் நீளமான குகையை எப்படி கண்டுபிடித்தார்கள் தெரியுமா?

தொலைந்த பொருள் திரும்ப கிடைக்கனுமா? இந்த கோவிலுக்குப் போங்க!

டைனோசர் காலத்திலேயே அழிந்துவிட்டதாக எண்ணப்பட்ட உயிரினம் கண்டுபிடிப்பு… சுவாரசிய தகவல்!

SCROLL FOR NEXT