Serials 
சின்னத்திரை / OTT

ஒரே நாளில் முடிவுக்கு வரும் 3 சீரியல்கள்... ரசிகர்கள் ஷாக்!

விஜி

ஒரே நாளில் 3 சீரியல்கள் முடிவுக்கு வரவுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வெள்ளித்திரைக்கு எப்படி ரசிகர்கள் உள்ளார்களோ, அதே அளவிற்கு சின்னத்திரை ரசிகர்களும் உள்ளனர். வெள்ளித்திரை ரசிகர்கள் கூட ஒவ்வொரு ஜானரில் இருப்பார்கள். ஆனால் சின்னத்திரை ரசிகர்கள், எப்போதும் ஒரே மாதிரி தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் சீரியல்களை பார்த்து தான் வருகின்றனர். கிராமங்களில் காலை ஆரம்பித்தால் இரவு தூங்கும் வரை சீரியல் என வாழும் மக்களும் உள்ளனர். சீரியல்களை வைத்தே இன்னும் மணி சொல்லும் மக்களும் வாழ்கின்றனர். அந்தளவிற்கு சின்னத்திரைக்கு ரசிகர்கள் பட்டாளம் உண்டு தான்.

இந்த நிலையில், சின்னத்திரை வாயிலாக ஏராளமான ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட, மூன்று முக்கிய சீரியல்கள் இன்று ஒரே நாளில் முடிவுக்கு வர உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சன்டிவியின் வானத்தைப்போல சீரியல் இன்றுடன் முடிவுக்கு வர உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஏற்கனவே ஜீ தமிழின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருந்த மீனாட்சி பொண்ணுங்க சீரியல் கடந்த ஆகஸ்ட் 4-ந் தேதி முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், தற்போது இந்திரா என்ற சீரியலும் முடிவுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஆன்மீக தொடரான சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் சீரியலும் முடிவுக்கு வர உள்ளது. ஜீ தமிழின் இந்திரா சீரியல் முடிவுக்கு வர உள்ளதால், அதற்கு பதிலாக இதயம் சீரியல் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளது. வானத்தைப்போல சீரியகுக்கு பதிலாக மூன்று முடிச்சு என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியலில், ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்த நடிகை சுவாதி கொண்டே நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதை போல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த மற்றொரு முக்கிய தொடரான, சண்டக்கோழி சீரியலும் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சீரியல், ஒரே வருடத்தில் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

கிரிப்டோவில் முதலீடு செய்வது சரியான யுக்தியா?

தண்ணீர் குடிப்பதற்கு இத்தனை விதிமுறைகளா? இது தெரியாம போச்சே!

சீதையின் அருள் பெற்ற அனுமன்!

அட, இப்படி ஒரு முறை தயிர் பச்சடி செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க! 

பெற்றோர்கள் பெறும் விவாகரத்து; பிள்ளைகளுக்குத் தரும் தண்டனை!

SCROLL FOR NEXT