Ott films 
சின்னத்திரை / OTT

இன்று ஒடிடியில் வெளியான படங்கள்!

பாரதி

நவம்பர் 1ம் தேதியான இன்று ஒடிடியில் வெளியான படங்கள் குறித்துப் பார்ப்போம்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நான்கு படங்கள் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகின. சிவகார்த்திகேயனின் அமரன் படம் நன்றாகவே வெற்றிநடைபோடுகிறது. அதேபோல், துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கவினின் ப்ளெடி பெகர் படம் ஒரளவு நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனையடுத்து ஜெயம் ரவியின் ப்ரதர் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றே சொல்லப்படுகிறது.

இதனையடுத்து இன்று நவம்பர் 1ம் தேதி ஒடிடியில் வெளியாகவுள்ள படங்கள் குறித்துப் பார்ப்போம்.

ஜீவா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளிவந்த திரில்லர் படமான பிளாக் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது. இது நல்ல விமர்சனத்தைப் பெற்றது. ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் கெரியரில் இது ஒரு நல்ல படம் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். முதலில் வெளியானபோது சில திரைகள் மட்டுமே இந்தப் படத்திற்காக ஒதுக்கப்பட்டன. ஆனால், படத்திற்கு கிடைத்த வரவேற்பால் மேலும் சில திரையரங்குகளில் திரையிடப்பட்டன. மேலும் 11 கோடிக்கும் மேல் வசூலித்ததாக சொல்லப்படுகிறது.

சதீஷ் நடிப்பில் வெளியான திரில்லர் படமான சட்டம் என் கையில் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு படங்கள் கோலிவுட்டில் வெளியாகிவுள்ள நிலையில், தெலுங்கு படமான விஸ்வம், பாலிவுட் படமன யுத்ரா, ஹாலிவுட் படமான ஸ்ட்ரேஞ்ச் டார்லிங், தி ப்ளூ கேவ் ஆகிய படங்கள் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி உள்ளன. நெட்ஃப்லிக்ஸ் தளத்தில் Murder Mindfully ஜெர்மன் வெப் தொடர் வெளியாகி உள்ளது. 

முன்பெல்லாம் தீபாவளி என்றால் திரையரங்குகள்தான் தெறிக்கும். இப்போதெல்லாம் தீபாவளி பண்டிகைக்கு ஒடிடியிலும் நல்ல படங்களை வெளியிட்டு அசத்துகிறார்கள். மேலும் இந்த முறை வார இறுதி நாட்களும் சேர்ந்து வருவதால், மக்கள் திரையரங்கிலும் ஒடிடி தளத்திலும் மாற்றி மாற்றிப் படம் பார்க்கிறார்கள்.

படம் பார்த்து டயர்டாகி படம் பார்த்து டயர்டாகிறார்கள். பத்தாததிற்கு அடுத்து கங்குவா, விடாமுயற்சி அப்டேட் என்று பெரிய லைனப்பே இருக்கிறது.

காலிஃப்ளவர் சமைக்கும் முன் இதை செய்யத் தவறாதீர்கள்! 

பத்தே நிமிடத்தில் சுடச்சுட வெஜ் கட்லெட்டும், சோயா கட்லெட்டும் செய்வோமா?

குழந்தைகளிடம் அடிக்கடி கேள்வி கேட்கும் பெற்றோரா நீங்க? அப்போ இதை நோட் பண்ணிக்கோங்க!

குறுநாவல்: 'அம்புஷ்' அத்தியாயம் - 5

நம் கைகளையும் கொஞ்சம் கவனிப்போமா?

SCROLL FOR NEXT