Baakiyalakshmi 
சின்னத்திரை / OTT

Baakiyalakshmi: இரண்டு நாளில் 8 லட்சம் தேவை… அடுத்தடுத்து சிக்கலில் மாட்டிக்கொள்ளும் பாக்கியா…

பாரதி

பாக்கியலட்சுமி சீரியலில் இந்த வார எபிசோடில் பாக்கியாவிற்கு அடுத்தடுத்த சங்கடங்கள் உருவாகி வருகின்றன. இந்த வார ப்ரோமோ குறித்துப் பார்ப்போம்.

பாக்கியாவின் ஈஸ்வரி ஹோட்டலில் உணவு சுகாதாரமாக இல்லை என்று ரெஸ்ட்டாரன்டிற்கு சீல் வைக்கிறனர். இதைப் பற்றி பாக்கியா மிகவும் கவலைக்கொள்கிறார். அழுதுக்கொண்டே இருக்கிறார். நிஜமாகவே சுகாதாரமாக இல்லையா என்று சாப்பிட்டுப் பார்க்க போகிறார். ஆனால், எழில் அதை தடுத்துவிடுகிறார்.

இதுகுறித்து பாக்கியா செய்தியில் பேசியதைப் பார்த்து கோபி மகிழ்ச்சியடைகிறார். அப்போது மூன்று நாள் ரெஸ்ட்டாரண்டிற்கு சீல் வைப்பதாக சொல்வதை கேட்டு, கோபி என்ன மூன்று நாள் தானா என்று கத்தி ஷாக் ஆகிவிடுகிறார். இதைக் கேட்டு ராதிகா வந்து என்ன நடந்தது என்று கேட்கிறார்.

 நடந்த அனைத்தையும் கோபி ராதிகாவிடம் கூறுகிறார். அதற்கு ராதிகா பாக்கியா அப்படி செய்கிறவர் இல்லை. உங்களுக்கும் இதற்கும் எதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று கேட்க… கோபி இல்லை என்று ராதிகாவை ஏமாற்றிவிடுகிறார். இதனையடுத்து ராதிகாவின் அம்மா இந்த விஷயத்தை வைத்து கோபியை இன்னும் தூண்டிவிடு என்று சொன்னதும் ராதிகா அவர் அம்மாவையும் திட்டிவிட்டுப் போகிறார்.

இன்னொருபக்கம் பாக்கியா வீட்டுக்கு வந்ததும், ஈஸ்வரி அவர் கையைப் பிடித்து அழுகிறார். என்னால்தான் அனைத்தும் நான் ஒரு ராசியில்லாதவள், நான் முதன்முதலில் ரெஸ்ட்டாரண்டிற்கு விளக்கு ஏற்றி வைத்திருக்க கூடாது என்று அழுகிறார். அதற்கு பாக்கியா அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று ஈஸ்வரிக்கும் சமாதானம் சொல்கிறார். இதனையடுத்து ஆர்டர் எடுத்த கணக்கைப் போட்டுப் பார்க்கிறார்.

இந்த ஆர்டர் எடுத்ததன் மொத்த ரூபாய் 11 லட்சம். ஆனால், கையில் 3 லட்சம் தான் உள்ளது. இதை வைத்து என்ன செய்யமுடியும் என்று பாக்கியா யோசிக்கிறார். பின் இரண்டே நாட்களில் 8 லட்சத்தை எப்படி சேர்க்கப்போவது என்று பாக்கியா  யோசிக்கிறார். இதனையடுத்து கோபி பாக்கியாவை மிகவும் சீண்டிப் பார்க்கிறார். இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் நடக்கிறது. பாக்கியா மீண்டும் நான் மேலே வருவேன் என்று கோபியிடம் அடித்து சொல்கிறார்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT