சின்னத்திரை / OTT

பிக்பாஸில் இந்த வாரம் நாமினேட்டானவர்கள் ஐஷு, பிரதீப்?

பாரதி

பிக்பாஸ் சீசன் 7  போட்டிகள், சண்டைகள் என மிக விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த வாரம் நாமினேஷன் ப்ராசஸ் ப்ரோமோ வெளியானது. இதில் பலரும் மாயா, பூர்னிமா, மணி, விச்சித்ரா என மாறி மாறி பெயர்களை கூறினார். ஆனால் அடுத்த ப்ரோமோவில் பிக்பாஸே நாமினேட் ஆனவர்களின் பெயரை கூறுகிறார். இந்த வாரம் ஐஷு , பிரதீப் ஆகிய இருவரும்  நாமினேட் லிஸ்ட்டில் உள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் தொடரில் இரு வீட்டார்களுக்கும் இடையில் பரபரப்பாகவே இருந்து வருகிறது. பிக்பாஸில்  நடத்தப்படும் போட்டிகளுக்கு இடையில் ஸ்ட்ரைக், வாய்த்தகறாரு என இருவீடுகள் மோதிக்கொள்கின்றனர்.

கமல் ஹாசனால் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தொடர் மக்களிடையே ஆறு சீசனாக நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. மோதல் ,நெகிழ்ச்சி சம்பவங்கள், ஆண்டவரின் கருத்துகள், என பல விஷயங்களை இந்த நிகழ்ச்சிகளில் காணலாம். ஏழாவது சீசனில் பிக்பாஸ், ஸ்மால்பாஸ் வீடுகள் என இரு வீடுகளாக பிரித்தனர். அதில் நன்றாக விளையாடாத ஆறு பேரை  ஸ்மால்பாஸ் வீட்டுக்குள் அணுப்பி வைக்கின்றனர்.

இந்நிலையில்தான் இன்று நாமினேஷன் ப்ரோமோ வெளியானது. அதில் அதிகமாக மாயா, பூர்னிமா பெயரைத்தான் கூறுகிறார்கள். மேலும் நாமினேட் செய்தால் டார்கெட் செய்வன் என்று ஒரு ரூம் மேட் கூறியதாக மணி கூறுகிறார். ரவீனா பூர்னிமாவை “ அழகுமட்டும்தான், அறிவு சுத்தமா இல்லை “ என்று கூறியது ப்ரோமோ கமண்டில் சிரிப்பலைகளை வரவைத்தது.அடுத்த ப்ரோமோவில் பிக்பாஸே நாமினேட் ஆனவர்கள் மாயா பிரதீப் என கூறுனார். மேலும் வீட்டில் இருப்பவர்கள் சகப் போட்டியாளர்களைப் பற்றி கூறுவதும் இன்றைய ப்ரோமோவில் வெளியானது.   

மனம் வறண்டு போகும்போது மழை நீரில் மீன் பிடித்தால்?

தேனுடன் லவங்கப்பட்டை சேர்ந்து வழங்கும் 11 அற்புதப் பலன்கள்!

சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கனமழையின் போது ஏசி பயன்படுத்தலாமா? நன்மைகளும், தீமைகளும்! 

நதியின் நடுவில் ஈரக் கருவறை உள்ள கோயில் எது தெரியுமா?

SCROLL FOR NEXT