Archana
Archana  
சின்னத்திரை / OTT

பிக்பாஸ் 7 டைட்டிலை தட்டி சென்ற அர்ச்சனா.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

விஜி

பிக்பாஸ் சீசனுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இதுவரை 6 சீசன்கள் கடந்த நிலையில் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி 7வது சீசன் தொடங்கியது. பல பல டவிஸ்ட்களை அடுக்கி தள்ளிய இந்த சீசனில் கடைசி வரை அந்த ட்விஸ்ட் நீடித்தது. 23 போட்டியாளர்கள் கலந்து கொண்டு அசத்தலாக விளையாடிய நிலையில் தினேஷ், மாயா, அர்ச்சனா, மணி, விஷ்ணு ஆகியோர் டாப் 5 போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் விஜய் அசத்தலாக விளையாடி டாப் 6இல் இருந்தார். கடைசி நாளான நேற்று பிக்பாசில் அனைத்து போட்டியாளர்களும் மீண்டும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியாகினர். இதுவரை எந்த சீசனில் இல்லாத ஒன்றாக இதுவும் அமைந்தது.

தொடர்ந்து 2வது ரன்னராக மாயாவும், 3வது ரன்னராக தினேஷும், 4வது ரன்னராக விஷ்ணுவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதுவரை 6 சீசனில் ஒரு பெண் போட்டியாளர் தான் டைட்டிலை கைப்பற்றியுள்ளார். தொடர்ந்து 7வது சீசனான இந்த சீசனில் பெண் போட்டியாளரான அர்ச்சனா வெற்றி பெற்றுள்ளார். இந்த சீசனில் சோசியல் மீடியாவில் அர்ச்சனாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருக்கும் நிலையில் அவரே டைட்டிலை கைப்பற்றினார். சக போட்டியாளர்கள் துரத்த பட்ட போதும் தனியாளாக நின்று அசத்தலாக விளையாடி ஜெயித்துள்ளார்.

கொன்றை பூவின் ஆரோக்கிய மகத்துவம் தெரியுமா?

உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?

Remote Work: தொழில்நுட்பமும், தொலைதூர வேலைகளும்! இதுதான் எதிர்காலமா? 

18 முறை படையெடுத்தும் 6 முறை தரைமட்டமாகியும் மீண்டெழுந்த ஆலயம்!

Managing Debts: சாமானியர்களுக்கான கடன் நிர்வாக யுக்திகள்! 

SCROLL FOR NEXT