BB 8 
சின்னத்திரை / OTT

பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்… வலுக்கும் எதிர்ப்புகள்!

பாரதி

பிக்பாஸ் சீசன் 8 தமிழில் ஒளிபரப்பாகி வரும் நிலையில், அந்த நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

இந்த சீசன் 8ல் தீபக், அர்னவ், ரஞ்சித், ரவீந்தர்சந்திரசேகர், கானாஜெப்ரி, விஜேவிஷால், நா. முத்துக்குமரன், சத்யா , அருண்பிரசாத், சௌந்தர்யாநஞ்சுந்தன், சாச்சனா, அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின், ஆர்ஜேஆனந்தி, பவித்ராஜனனி, தர்ஷாகுப்தாஎன 18 பேர் கலந்துக்கொண்டனர். போன சீசனில் எப்படி பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என்று இரு வீடுகளாக பிரித்தனரோ அதேபோல் இப்போது ஆண்கள் வீடு, பெண்கள் வீடு என்று பிரித்திருக்கின்றனர். இந்த இரு டீமுக்கும் இடையே போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து முதல் வாரம் ரவீந்திரன் எவிக்ட் செய்யப்பட்டார்.

இதனையடுத்து இரண்டாவது வாரம் அர்னவ் எவிக்ட் செய்யப்பட்டார். அதன்பிறகு தர்ஷா குப்தா எவிக்ட் செய்யப்பட்டார்.

இதனையடுத்து அன்ஷிதா எவிக்ட் செய்யப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில், நோ எவிக்ஸன் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் வைல்ட் கார்டு மூலம் 6 பேர் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அந்தவகையில் இப்போது 21 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இப்படியான சூழ்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

அதாவது தூத்துக்குடி மாவட்டம் கோட்டாச்சியர் அலுவலம் முன்பு, கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினைச் சேர்ந்தவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும் என கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் கலாச்சாரத்திற்கு எதிராக இருப்பதாகவும், தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை மத்திய மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து தங்களது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதுதான் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

நிகழ்ச்சியில் அதிகம் ஆபாச வார்த்தைகளையும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட வார்த்தைகளையும் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளனர். பிக்பாஸ் சீசன் 1 தொடங்கும்போது இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. இதனையடுத்து இப்போது மீண்டும் வெடித்துள்ளது.

இதற்கு காரணம் இந்த சீசனில், விஜய் சேதுபதி தவிர மற்ற எதுவுமே சரியில்லாததுதான் என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

நவம்பர் 26 - 75 வருடங்கள் நிறைவு செய்யும் இந்திய அரசியலமைப்பு தினம்!

Jeff Bezos-ஐ கோடீஸ்வரன் ஆக்கிய விதி என்ன தெரியுமா? 

முகத்தை மூடித் தூங்குபவரா நீங்கள்? அச்சச்சோ போச்சு!

குளிர்காலத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள்!

முகம் ஒரு ஓவியம் என்றால், உதடுகள் அதன் இதயம்!

SCROLL FOR NEXT