பிக்பாஸ் சீசன் 8ல் அடுத்த டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில் இந்த டாஸ்க்கை பெண்கள் அணியில் சிலர் ஏற்க மறுக்கின்றனர். மேலும் ரசிகர்களும் இது ஒரு டாஸ்க்கா என்று கொந்தளிக்கின்றனர்.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 8 விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. போன சீசனில் எப்படி பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என்று இரு வீடுகளாக பிரித்தனரோ அதேபோல் இப்போது ஆண்கள் வீடு, பெண்கள் வீடு என்று பிரித்திருக்கின்றனர். இந்த இரு டீமுக்கும் இடையே போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதனையடுத்து ரவீந்திரன், அர்னவ் மற்றும் தர்ஷா குப்தா ஆகியோர் எவிக்ட் செய்யப்பட்டனர். இதனையடுத்து ஒரு வாரம் நோ எவிக்ஸன் மற்றும் வைல்டு கார்டு என்ட்ரி நடைபெற்றது. இதன்மூலம் 6 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். கடந்த வாரம் சுனிதா எவிக்ட் செய்யப்பட்டார்.
இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் ஒருவொருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டே இருந்தனர். இதனையடுத்து இன்று காலை பிக்பாஸ் ப்ரோமோ வெளியானது. இதில் ஆண்கள் அணி பெண்கள் அணிக்கு ஒரு டாஸ்க் கொடுக்கிறார்கள். அதாவது ஆண்கள் அணி சமைத்துக் கொண்டிருக்கும்போது பெண்கள் அணி இடுப்பில் கை வைத்து நிற்க வேண்டுமாம். இதனை விஷால் செய்துக் காண்பிக்கிறார். இடுப்பில் கைவைத்துக்கொண்டு நடந்து காண்பிக்கிறார். அவர் நடந்து காட்டியதை பார்த்ததும், எனக்கு இந்த பாடி லேங்குவேஜில் உடன்பாடில்லை என முதலில் எதிர்ப்பு தெரிவித்தது மஞ்சரி தான்.
இதற்கு விஷால் அடுத்து டாஸ்க் பண்ணனும்னு எனக்கு அபிப்ராயம் இல்லைனு சொல்லுவீங்க. அடுத்தது கோடு இருக்கிறதுல எங்களுக்கு அபிப்ராயம் இல்லனு சொல்லுவீங்க என சொன்னதை கேட்டு ஷாக் ஆகி வாயை பிளந்தபடி பார்த்தார் மஞ்சரி.
ஆனந்தியும் நம்ம என்ன லூசா என்று சொல்லி பொங்கியிருக்கிறார். இந்த டாஸ்க்கில் சவுந்தர்யாவிற்கு உடன்பாடுதான். ஆனந்திக்கு என்ன பிரச்சனை என ஜாக்குலினிடம் கேட்டார் சவுந்தர்யா. அவளுக்கு பிரச்சனை இருக்கு என்றார் ஜாக்குலின். மத்தவங்க இந்த டாஸ்க் செய்ய ஒத்துக்கிட்டாங்க என கேப்டன் அருண் பிரசாத் சொல்ல, எனக்கு இதில் விருப்பம் இல்லை என கூறிவிட்டார் ஆனந்தி.
இந்த இடுப்பு டாஸ்க் பெண்களை கலாய்ப்பதுபோல் இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் ரசிகர்களும் பதிவிட்டு வருகின்றனர்.