BIggboss 8 
சின்னத்திரை / OTT

Biggboss 8: மீண்டும் நாமினேஷன் ஃப்ரீ பாஸை ஜெயித்த பெண்கள் அணி… யாரை காப்பாற்றப் போகிறார்கள்?

பாரதி

கடந்த வாரம் போல் இந்த முறையும் பெண்கள் அணியே நாமினேஷன் ஃப்ரீ பாஸை வென்றிருக்கிறது. இதனையடுத்து பெண்கள் அணி யாரைக் காப்பாற்றுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

இந்த சீசன் 8ல் தீபக், அர்னவ், ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி, விஜே விஷால், நா. முத்துக்குமரன், சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன், சாச்சனா, அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின், ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துக்கொண்டனர்.

போன சீசனில் எப்படி பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என்று இரு வீடுகளாக பிரித்தனரோ அதேபோல் இப்போது ஆண்கள் வீடு, பெண்கள் வீடு என்று பிரித்திருக்கின்றனர். இந்த இரு டீமுக்கும் இடையே போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதனையடுத்து முதல் வாரம் ரவீந்திரன் எவிக்ட் செய்யப்பட்டார். இதன் அடுத்த வாரத்தில் ஆர்னவ் எவிக்ட் செய்யப்பட்டார்.

இதனையடுத்து இந்த வாரத்திற்கான நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க் நடத்தப்பட்டது.  நூலில் பந்தை கொண்டு வந்து கொடுக்கப்பட்டிருக்கும் பாக்ஸில் விழ செய்ய வேண்டும். இந்த டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டு பெண்கள் அணி நாமினேஷன் பிரீ பாசை அசால்டாக தட்டி சென்றனர். இந்த பாஸ் வைத்து யாரைக் காப்பாற்றுவது என்று அனைவரும் ஒன்று சேர்ந்து கலந்தாலோசித்தனர். இறுதியில் அனைவரும் பவித்ராவை தேர்ந்தெடுத்தனர். இதனால், சௌந்தர்யா ஜெஃப்ரியிடம் இதை சொல்லி அழுதார். அதாவது நான் டீமுக்காக எதுவும் செய்யவில்லையா ஒருதலைப் பட்சமாக செயல்படுவது போல் இருக்கிறது என்று ஜெஃபிரியிடம் கூறி அழுகிறார்.

இதனையடுத்து இந்த வாரம் சிறப்பாக பங்கேற்றவர் யார் என்ற டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் ஆனந்தியும் முத்துக்குமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த வார தலைவர் போட்டிக்கு போட்டியிட இருக்கின்றனர். அடுத்ததாக பிக் பாஸ் இன்று வீட்டுக்கு ஸ்பெஷல் கெஸ்ட் வருவதாகவும் அதனால் முன்னேற்பாடுகள் அனைத்தையும் செய்ய வேண்டும் என்று கூறினார்.

இதன்பிறகு சிவகார்த்திகேயன் பிக்பாஸ் வீட்டிற்குள் அமரன் ப்ரோமோஷனுக்காக வருகிறார். அமரன் ட்ரைலர் ஒளிபரப்பப்படுகிறது. இதைப் பற்றி சிவகார்த்திகேயனும் பிக்பாஸ் வீட்டினரும் கலந்துரையாடினர். இறுதியாக கேக் வெட்டி வாழ்த்துக்களுடன் சிவகார்த்திகேயன் வெளியேறினார். இதனையடுத்து இன்று விஜய் சேதுபதி பிக் பாஸ் வீட்டினரை நேரில் சந்திக்கவுள்ளார். பிக்பாஸ் வீட்டினருக்கு விஜய் சேதுபதி என்ன சொல்லப்போகிறார் என்ற பதற்றம் ஏற்கனவே ஆரம்பித்திருக்கும்.

கென்யாவில் 'தேனீ வேலி' - யானைகளையும் மனிதர்களையும் காக்கும் நல்முயற்சி!

விண்வெளியில் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்க முடியுமா?

தொற்று நோய்களைப் புரிந்துகொள்வது எப்படி?

வரமிளகாய் வத்தக்குழம்பும், ஸ்பைசி தொண்டக்காய் வறுவலும்!

இது தெரிஞ்சா இனி நீங்க பிரட் சாப்பிடவே மாட்டீங்க! 

SCROLL FOR NEXT