BB 8 Update 
சின்னத்திரை / OTT

Biggboss 8: பழி தீர்க்கும் சவுந்தர்யா… வசமாக மாட்டிக்கொண்ட விஷால், தீபக், ராயன்!

பாரதி

பிக்பாஸ் சீசன் 8ன் இன்றைய ப்ரோமோவில் விஷால், தீபக் மற்றும் ராயன்மீது வன்மத்தைக் கொட்டி பேசுகிறார் சவுந்தர்யா.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 8 விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. போன சீசனில் எப்படி பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என்று இரு வீடுகளாக பிரித்தனரோ அதேபோல் இப்போது ஆண்கள் வீடு, பெண்கள் வீடு என்று பிரித்திருக்கின்றனர். இந்த இரு டீமுக்கும் இடையே போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதனையடுத்து ரவீந்திரன், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா ஆகியோர் எவிக்ட் செய்யப்பட்டனர். இதனையடுத்து ஒரு வாரம் நோ எவிக்ஸன் மற்றும் வைல்டு கார்டு என்ட்ரி நடைபெற்றது. இதன்மூலம் 6 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். இவர்களில் ரியா இந்த வாரம் எவிக்ட் செய்யப்பட்டார்.

அந்தவகையில் நேற்று நடந்த ராஜா ராணி டாஸ்க்கில் அரிமா தேசத்தை சேர்ந்த ஆண்கள் அணியினர் வெற்றிபெற்றனர். இந்த வாரம் சிறப்பான பங்களிப்பைத் தராத இருவரை சக போட்டியாளர்கள் கூறுகின்றனர். இதில் பெண்கள் அணி சார்பாக சவுந்தர்யாவையும், ஆண்கள் அணி சார்பாக சிவாவையும் தேர்ந்தெடுக்கின்றனர். இதற்கு தண்டனை அளிக்கப்படுகிறது. அதாவது இவர்கள் இருவரையும் பற்றி சக போட்டியாளர்கள் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் பிக்பாஸ் பேச சொல்கிறார். அந்தவகையில் அனைவரும் இருவரையும் சரமாரியாக தாக்கிப் பேசுகின்றனர். இவை அனைத்தையும் பொருமையாக வாங்கிக்கொண்டார் சவுந்தர்யா.

ஆனால், இவை அனைத்திற்கும் திருப்பி பழி வாங்குகிறார். அதாவது சவுந்தர்யாவின் வாய்ப்பு வந்ததும். அனைவரையும் நிக்க வச்சு வன்மத்தைக் கொட்டுகிறார். முதலில் விஷாலிடம் நீ என்ன முகத்திற்கு நேரா பேச மாட்டியா என்று முகத்திற்கு நேராகவே கேட்டுவிடுகிறார். அதேபோல், ராயனிடம் நீ என்ன ஷோவில் சும்மா உக்காந்து ஜால்றா அடிக்கலான்னு வந்தியா என்று கேட்கிறார். பின் தீபக்கிடம் தீபக் ப்ரோ நீங்கள் உங்களுக்குத் தெரிந்த மேனர்ஸோட விளையாடுங்க, நாங்க எங்களுக்குத் தெரிஞ்ச மேனர்ஸோட விளையாடுறோம் என்கிறார்.

இதனையடுத்து இனிமேல் நாலாம் சொல்ல மாட்டேன் டாஸ்க் பண்ணுங்க, டாஸ்க் பண்ணுங்கன்னு என்று சொல்கிறார். இத்துடன் ப்ரோமோ முடிகிறது.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT