சின்னத்திரை / OTT

பிக்பாஸ் 7 எப்போது? வெளியானது அப்டேட்!

விஜி

பிக்பாஸின் அடுத்த சீசன் எப்போது என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில், பிக்பாஸ் 7ன்புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்போரின் விருப்பமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக பிக்பாஸ் இருந்து வருகிறது. வெளிநாடுகளிலும், இந்திய மொழிகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தமிழிலும் 6 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அடுத்து வரவிருக்கும் 7வது சீசனையும் அவர்தான் தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டு, அதன் புரொமோக்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில், பிக்பாஸ் 7 நிகழ்ச்சி எப்போது தொடங்குகிறது என்பது ரசிகர்கள் பலரின் கேள்வியாக உள்ளது. அவர்களுக்கெல்லாம் பதில் தரும் வகையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி அக்டோபர் 2வது வாரத்தில் தொடங்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பிக்பாஸ் சீசன் 7 எப்போது ஆரம்பிக்கும் என்கிற விபரத்தை ஸ்டார் விஜய் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

மேலும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப்போகும் போட்டியாளர்கள் யார் யார் என்கிற விபரமும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், அதுகுறித்த தகவல்கள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. இந்த அறிவிப்புகளைக் கேட்டுவரும் ரசிகர்கள் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியை ஆவலோடு எதிர்நோக்கிக் காத்து கொண்டிருக்கின்றனர்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT