BB 8 
சின்னத்திரை / OTT

பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறப் போவது யார் தெரியுமா?

பாரதி

பிக்பாஸ் சீசன் 8ல் வார இறுதியில் விஜய் சேதுபதி சந்திக்கும் நிலையில், நாளை எவிக்ஸன் நடைபெறும். அந்தவகையில் இந்த வாரம் யார் எவிக்ட் செய்யப்படுகிறார் என்ற செய்திகள் வந்துள்ளன.

இந்த சீசன் 8ல் தீபக், அர்னவ், ரஞ்சித், ரவீந்தர்சந்திரசேகர், கானாஜெப்ரி, விஜேவிஷால், நா. முத்துக்குமரன், சத்யா , அருண்பிரசாத், சௌந்தர்யாநஞ்சுந்தன், சாச்சனா, அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின், ஆர்ஜேஆனந்தி, பவித்ராஜனனி, தர்ஷாகுப்தாஎன 18 பேர் கலந்துக்கொண்டனர்.

போன சீசனில் எப்படி பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என்று இரு வீடுகளாக பிரித்தனரோ அதேபோல் இப்போது ஆண்கள் வீடு, பெண்கள் வீடு என்று பிரித்திருக்கின்றனர். இந்த இரு டீமுக்கும் இடையே போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து முதல் வாரம் ரவீந்திரன் எவிக்ட் செய்யப்பட்டார். போகும்போது ஒவ்வொருவரையும் பற்றி விமர்சனம் சொல்லி தெறிக்கவிட்டுப் போய்விட்டார்.

இதனையடுத்து அர்னவ் எவிக்ட் செய்யப்பட்டார். அதன்பிறகு சென்ற வாரம் இறுதியில் நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க் நடத்தப்பட்டது.  இந்த டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டு பெண்கள் அணி நாமினேஷன் பிரீ பாசை அசால்டாக தட்டிச் சென்றனர். இந்த பாஸ் வைத்து யாரைக் காப்பாற்றுவது என்று அனைவரும் ஒன்று சேர்ந்து கலந்தாலோசித்தனர். இறுதியில் அனைவரும் பவித்ராவை தேர்ந்தெடுத்தனர். இதனால் தர்ஷா குப்தா எவிக்ட் செய்யப்பட்டார்.

அந்தவகையில் இந்த வாரம் ஜெஃப்ரி, சுனிதா, பவித்ரா, அன்ஷிதா, சத்யா, அருண் பிரசாத், தீபக், ஜாக்குலின் மற்றும் ரஞ்சித் உட்பட 9 பேர் நாமினேட் ஆனார்கள். இதில் முத்து, ஆர்ஜே ஆனந்தி, சாச்சனா, சவுந்தர்யா, விஜே விஷால் உள்ளிட்டோர் நாமினேட் ஆகவில்லை.

ஜெஃப்ரி முதலிடத்தில் இருப்பதால், அவர்தான் முதலாவதாக காப்பாற்றப்படுவார் என்றே சொல்லப்படுகிறது. பவித்ரா, அன்ஷிதா மற்றும் சுனிதா ஆகிய 3 பேர் தான் குறைவான ஓட்டுகளுடன் கடைசி இடத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆஃப் லைன் ஓட்டிங்கிலும் அவர்கள் தான் அடிவாங்கியுள்ளனர். ஆனால், சுனிதா நாமினேஷன் ஃப்ரீ பாஸ் மூலமாக காப்பாற்றப்பட்டிருக்கிறார்.

இந்தநிலையில் இந்த வாரம் அன்ஷிதா பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

கடந்த வாரம் தர்ஷா குப்தாவுக்கு நாமினேஷன் ஃப்ரீபாஸ் கொடுக்காமல் அவர் அவுட் ஆனார். இந்தமுறை அதேபோல் நாமினேஷன் ஃப்ரீபாஸ் கிடைத்ததால் சுனிதா தப்பித்துக்கொள்ள அன்ஷிதா வெளியேறியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.


இளம் வயதினரைத் தாக்கும் புற்று நோய்கள் என்னென்ன தெரியுமா? 

கென்யாவில் 'தேனீ வேலி' - யானைகளையும் மனிதர்களையும் காக்கும் நல்முயற்சி!

விண்வெளியில் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்க முடியுமா?

தொற்று நோய்களைப் புரிந்துகொள்வது எப்படி?

வரமிளகாய் வத்தக்குழம்பும், ஸ்பைசி தொண்டக்காய் வறுவலும்!

SCROLL FOR NEXT