Baakiyalakshmi 
சின்னத்திரை / OTT

மகளாக பாக்கியா செய்யும் இறுதிச் சடங்குகள்… இறுதி பயணத்தில் ராமமூர்த்தி!

பாரதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில், பாக்கியாவே தனது மாமனார் ராமமூர்த்திக்கு இறுதிச் சடங்குகள் செய்கிறார்.

விஜய் டிவியில் ரசிகர்களை அதிகம் ஈர்க்கும் ஒரு சீரியல் பாக்கியலட்சுமி. ஒரு குடும்ப பெண் தன் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னேறி வருகிறார் என்பதும், குடும்பத்தையும் வேலையையும் சரி சமமாக எப்படி பார்த்து வருகிறார் என்பதும் முக்கிய கதையாக அமைந்திருக்கிறது. கிளை கதைகளும், சமுகம் புரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்களும் ஏராளம்.

அந்தவகையில் இந்த சீரியல் 1000 எபிசோட்களை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது. அந்தவகையில் பாக்கியலட்சுமி சீரியல் ஒரு முக்கிய கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. ஆம்! பாக்கியாவிற்கும், பாக்கியாவின் முடிவுகளுக்கும் எப்போதும் துணையாக இருக்கும் பாக்கியாவின் மாமனார் ராமமூர்த்தி உயிரிழந்துள்ளார்.

தனது 80வது வயது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய அவர், அடுத்த நாள் காலையில் எழவே இல்லை. அப்படியே உயிர் பிரிந்ததுபோல் காட்சி படுத்தப்பட்டிருந்தது. இறுதியாக பாக்கியாவிடம் மனம் விட்டு கண்கலங்கி பேசினார் ராமமூர்த்தி.  

இவரின் இறப்பைக் கேட்டு கோபி பேரதிர்ச்சி அடைகிறார். இன்றைய எபிசோடில் அனைவரும் மனம்கலங்கி அழுததைப் பார்க்க முடிந்தது. அதிர்ச்சியில் உறைந்து போன ஈஸ்வரியும் ஒரு கட்டத்தில் வெடித்து அழுததை பார்க்க முடிந்தது.

ஈஸ்வரி, ராமமூர்த்தியின் இறப்பிற்கு கோபிதான் காரணம் என்றும், கோபி இறுதி சடங்கை செய்யக்கூடாது என்றும் கூறிவிடுகிறார்.

கோபி அந்த தண்டனையை மட்டும் எனக்கு கொடுத்துவிடாதீர்கள் என்று எவ்வளவோ சொல்லியும் ஈஸ்வரி கேட்கவில்லை. அவர் பாக்கியாவிடம், 'அவருடைய ஆத்மா சாந்தி அடையனும்னா நீதான் இறுதி சடங்கு செய்யனும்' என்கிறார். இதைக் கேட்டு பாக்கியா உடனே இறுதி சடங்கு செய்ய தயாராகிறார். ஆரம்பம் முதல் உடல் தகனம் வரை பாக்கியாவே சடங்குகள் செய்கிறார்.

தகனம் செய்யும்போது கதறி அழும் பாக்கியாவை இரு மகன்களும் தாங்கிப் பிடிக்கும் காட்சி வரை ப்ரோமோவில் இடம்பெற்றிருக்கிறது.

பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு நெருக்கமான கதாபாத்திரமான தாத்தா கதாபாத்திரத்தின் இறப்பு, சீரியலின் பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. இதனையடுத்து இந்த சீரியல் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT