லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பல வருட கடின உழைப்புக்குப் பின்னரே இந்த நிலையை அடைந்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். அவர் கடந்த 21 வருடங்களில் 75ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கலைமாமணி, நந்தி விருதுகள், ஃபிலிம் ஃபேர் விருது, ஃபோர்ப்ஸ் விருது என பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார்.
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்தத்திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான் போன்ற விஐபிக்கள் கலந்து கொண்டனர்.
அப்போதே இந்தத் திருமணத்தை படமாக ஒளிபரப்புவதாக பேச்சு அடிபட்டது. ஆனால் இப்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் "Nayanthara: Beyond the Fairy Tale" எனும் Documentary படம் 2024 நவம்பர் மாதம் 18 ஆம் தேதி ஒளிபரப்பாகும் என போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
அதில் நயன்தாரா இது வரை கடந்து வந்த பாதையை விவரிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அவர் சுலபமாக இந்த இலக்கை அடையவில்லை, மாறாக பல போராட்டங்களைக் கடந்து வந்துள்ளார் என்னும் குறிப்பைக்காண முடிகிறது.
அது மட்டுமன்றி அவர் பிறந்த நாளுக்கான சமர்ப்பணம் இப்படம் எனவும் கூறப்பட்டுள்ளது. இது திருமணம் சம்பந்தப்பட்ட படமாக இல்லாமல் அவர் பற்றிய ஒரு ஆவணப் படமாக இருக்கலாம்.
எனவே இப்படம் ஒரு சிறந்த, மாறுபட்ட அனுபவமாக இருக்கக்கூடும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பார்த்தால் தெரியும்.