Pandian Stores 2 
சின்னத்திரை / OTT

Pandian Stores 2: தங்கமயில் அப்பா சொன்ன வார்த்தையால் பொங்கி எழுந்த பாண்டியன்!

பாரதி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் அடுத்தடுத்து விறுவிறுப்பான கட்டத்தை நோக்கிச் செல்கிறது.

கோமதி அம்மா நன்றாக இருப்பதைத் தெரிந்துக்கொண்டு பழனி கோமதியிடம் வந்து கூறுகிறார். பின்புதான் கோமதி ஆறுதல் அடைகிறார். பிறகு கோமதி தனது அம்மாவுக்காக சமைத்து பழனியிடம் கொடுக்கும்போது பாண்டியன் பார்த்துவிடுகிறார். ஆனால், அவர் எதுவும் சொல்லாமல் போய்விடுகிறார். பழனி சென்று கோமதி அம்மாவிடம் உணவை கொடுக்கிறார். அதை சாப்பிட்டுவிட்டு மகிழ்ச்சி அடைகிறார்.

அதை வீடியோவாக எடுத்து கோமதியிடம் பழனி காண்பித்தார். அதைப் பார்த்து கோமதி ரொம்ப சந்தோஷப்பட்டு அழுதார். பின் தன் அம்மாவை எப்படியாவது பார்க்க வேண்டும்  என்று சொல்ல, அதற்கு மகன்கள் எல்லோரும் சேர்ந்து திட்டம் போட்டார்கள். பின் ராஜி வீட்டில் இருந்து யாருமே ஹாஸ்பிடலுக்கு வரக்கூடாது. அதற்கு நீங்கள் தான் பொறுப்பு என்று பழனியிடம் வேலையை ஒப்படைத்தார்.

அப்போது பழனி வீட்டிற்கு சென்று தனது அண்ணன்களிடம் பேச்சுக் கொடுத்து அங்கேயே இருக்க வைக்கிறார். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலுக்கு கோமதி- ராஜி இருவருமே போனார்கள். தன் அம்மாவை பார்த்து கோமதி ஆனந்தத்தில் அழுது புலம்பினார். ஆனால், ராஜி பேசியும் முகம் கொடுத்து கூட பேசவில்லை. கோமதி, தன்னுடைய அம்மாவிடம் மனம் விட்டு பேசினார்.

நேற்றைய எபிசோட்டில் ராஜு, எவ்வளவோ கெஞ்சி கதறி அழுதும் அவருடைய அம்மா ஏற்றுக்கொள்ளவே இல்லை. இன்னொரு பக்கம் பழனியின் அண்ணன்கள் பெண் வீட்டார் வரவில்லை என்று கோபப்படுகிறார்கள். கடைசியில் அவர்கள் ஹாஸ்பிடலுக்கு கிளம்ப பார்த்தார்கள்.

உடனே பழனி கதிரிடம் வந்து உண்மையை சொல்ல, கதிர் அவர்களை வீட்டுக்கு அழைத்து வந்தார். பாண்டியனிடம் கோமதி தான் அம்மாவுக்காக கோவிலுக்கு போனதாக சொல்கிறார். பின் கதிர் செய்த வேலையை நினைத்து கோமதி பெருமையாகவும், சந்தோஷப்பட்டும் பேச, இதற்கெல்லாம் மற்றவர்களும் தான் உதவி செய்தார்கள் என்று மீனா சொன்னார். உடனே கோமதி மூன்று மகன்களையும் பற்றி புகழ்ந்து பேசினார்.

இதனையடுத்து இன்றைய ப்ரோமோவில், தங்கமயில் தனது அம்மாவிடம் வீட்டில் யாருமே என்னிடம் முகம் கொடுத்து பேசவில்லை என்று கூறுகிறார். உடனே தங்கமயில் அம்மாவும் அப்பாவும் கிளம்பி வருகிறார்கள். அப்போது வீட்டில் யாருமே ஏன் தங்கமயில் இடம் பேசவில்லை என்று அவருடைய அப்பா, அம்மா கேட்டார்கள். உடனே கோபத்தில் கோமதி, ஹோட்டலுக்கு செலவு செய்தது குறித்து சொல்ல, இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. பணத்தை நான் திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என்று தங்கமயில் அப்பா சொன்னார். உடனே பாண்டியன் ரொம்ப கோபப்பட்டு எழுந்திருக்கிறார். இத்துடன் ப்ரோமோ முடிவடைகிறது,.


உறவுகளை வளர்ப்போம்; மகிழ்ச்சியாய் வாழ்வோம்!

வீட்டிலேயே இருக்கு அவசரத்திற்கு உதவும் கை மருந்துகள்!

கேப்டன் அமெரிக்கா கூறிய 10 ஊக்கமூட்டும் வரிகள்!

தீபாவளி திருநாளில் ஸ்ரீமகாலக்ஷ்மி அருளைப் பெற்றுத் தரும் சில பரிகாரங்கள்!

அதிகப்படியான இஞ்சி உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள்!

SCROLL FOR NEXT