Raghu thatha 
சின்னத்திரை / OTT

ஓடிடி தளத்தில் பட்டையை கிளப்பும் ரகு தாத்தா… இதை எதிர்பார்க்கவே இல்லையே!

பாரதி

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரகு தாத்தா படம், திரையரங்கில் எதிர்பார்த்த அளவிற்கு ஓடாத நிலையில், ஓடிடி தளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரகு தாத்தா படத்தை சுமன் குமார் இயக்கினார். இப்படம் நம்மை அந்த காலத்து ஸ்டைலுக்கு அழைத்துச் செல்லும். ஹிந்தி திணிப்பு, பெண்ணியம் போன்றவற்றை அழகாக சொல்லியிருப்பார் இயக்குநர்.

பெண்கள் இதுதான் செய்ய வேண்டும், அதுதான் செய்ய வேண்டும் என்று அந்தக் காலத்தில் இருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் உடைத்து உருவான ஒரு கதாபாத்திரம்தான் கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம். ஆனால், கீர்த்தி சுரேஷ் காதலிக்கும் செல்வன் வெளியில் ஒருமாதிரியும், உள்ளுக்குள் பெண்களை சமையலறையில் இருக்கும் ஒரு ஜடமாக பாவிக்கும் ஒருவராகவே இருப்பார்.

ஆனால், வில்லன் ரோலாகவே இருந்தாலும், செல்வன் அவ்வளவு நன்றாக தனது நடிப்பை வெளிக்காட்டிருப்பார். அதேபோல், கீர்த்தி சுரேஷின் அண்ணன், அண்ணி, தாத்தா போன்ற கதாபாத்திரங்களும் நன்றாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.  

படத்தின் முக்கிய ப்ளஸே, கீர்த்தி சுரேஷின் வசனங்கள்தான். அனைத்து பெண்களும் ரசிக்கக்கூடிய வசனங்களாக இடம்பெற்றிருக்கும்.

இப்படம் திரையரங்கில் தங்கலான், டிமான்ட்டி காலணி 2 ஆகிய படங்களுக்கு போட்டியாக வெளியிடப்பட்டது. அதனால், எதிர்பார்த்த அளவு படம் ஓடவில்லை. இப்படத்திற்கு வழங்கப்பட்ட காட்சிகளும் குறைவே. ரகு தாத்தா படம் தியேட்டரில் கிட்டத்தட்ட ரூபாய் 5 கோடிகளுக்கும் குறைவாகத்தான் வசூல் செய்ததாக கூறப்படுகின்றது.

தியேட்டரில் படத்தின் வசூல் குறைவாக இருந்தாலும், படத்திற்கு ஓடிடி தளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் ஜீ5 ஓடிடி தளத்தில் கடந்த 13ஆம் தேதியில் இருந்து ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. படம் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் 50 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமாக ஓடிடி தளத்தில் ஓடியுள்ளது.

ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு இதுவரை 100 மில்லியன் நிமிடங்களுக்கும் மேலாக ஸ்ட்ரீம் ஆனதாக கடந்த 21ஆம் தேது படக்குழுவும் ஜீ5 நிர்வாகமும் தெரிவித்தது.

நேற்றைய தகவல்படி, படத்தின் ஸ்ட்ரீமிங் நேரம் மட்டும் 150 மில்லியன் நிமிடங்களைக் கடந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. 2024ம் ஆண்டு பிற்பாதியில் ரிலீஸ் ஆன படங்களில் அதிக நேரம் ஸ்ட்ரீம் ஆன படமாக ரகு தாத்தா படம் உருவெடுத்துள்ளது.

தியேட்டரில் ஓடாமல், ஓடிடி தளத்தில் மக்கள் மனதை வென்ற ஒரு படமாக ரகு தாத்தா உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT