சின்னத்திரை / OTT

எதிர் நீச்சல் சீரியலுக்கு மவுசு குறையாதது ஏன்?

கல்கி டெஸ்க்

ன் டீ வியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற கோலங்கள் நெடுந்தொடரை இயக்கிய திருச்செல்வம்தான் தற்போது எதிர்நீச்சல் சீரியலையும் இயக்கி வருகிறார்.

சின்னத்திரையில் சீரியல்களுக்கு நாளுக்கு நாள் மவுசு அதிகரித்த வண்ணம் உள்ளன. முன்பெல்லாம் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை ஒளிபரப்பப்பட்டு வந்த சீரியல்கள் தற்போது சனிக்கிழமையிலும் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த அளவுக்கு சீரியல்கள் மீதான மோகம் மக்களிடையே அதிகரித்துவிட்டது என்றால் அது மிகையாகாது. ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றார்போல் வித்தியாசமான கதைக்களங்களுடன் பல்வேறு சீரியல்கள் பல்வேறு சானல்களில் ஒளிபரப்பாகி வருகின்றன.

அதிலும் குறிப்பாக தற்போது டிரெண்டிங்கில் உள்ளது எதிர்நீச்சல் சீரியல்தான். சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே தேவையானி நடித்து மெகா ஹிட் ஆன கோலங்கள் என்கிற தொலைக்காட்சி தொடரை இயக்கியவர் ஆவார். தற்போது பல ஆண்டு களுக்குப் பின் எதிர்நீச்சல் சீரியல் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். 

விரைவில் மேலும் இரண்டு புது சீரியல்களையும் ஒளிபரப்ப உள்ளது சன் டிவி. அதன்படி மலர், மிஸ்டர் மனைவி என இரண்டு புது சீரியல்கள் விரைவில் ஒளிபரப்பாக உள்ளன. இதில் மலர் சீரியலில் சித்தி 2 தொடரின் நாயகி ப்ரீத்தி ஷர்மாவும், மிஸ்டர் மனைவி சீரியலில் செம்பருத்தி புகழ் ஷபானாவும் நாயகிகளாக நடிக்கின்றனர். இரண்டு சீரியல்களின் முன்னோட்ட காட்சிகள் சன் டிவியில் தற்போது வெளியாகி வருகின்றன.

இது எதிர்நீச்சல் சீரியல் அளவுக்கு இருக்குமா? என்கிற கருத்தைதான் ரசிகர்கள் அதிகளவில் கூறி வருகின்றனர். இப்படி எதிர்நீச்சல் சீரியல் மக்களிடம் மவுசு குறையாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அதன் விறுவிறுப்பான திரைக்கதை தான் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அதில் முக்கிய கதாபாத்திரத்தில் குணசேகரன் என்ற எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கும் மாரிமுத்துவிற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த அளவிற்கு சீரியலில் மிரட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏராளமான அனுபவம் வாய்ந்த நடிகர், நடிகைகளும் நடித்து வருவதும் அந்த சீரியலின் பலமாக பார்க்கப்படுகிறது. 

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT