வெள்ளித்திரை

மலையாள திரை உலகில் 200 கோடியை தாண்டி சாதித்த "2018"

தனுஜா ஜெயராமன்

மலையாள திரையுலகில் முதன் முறையை இருநூறு கோடிக்கு மேல் வசூலை தாண்டியுள்ளது ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கிய திரைப்படம் ஒன்று. இந்த படம் கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழிலும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், ஆசிப் அலி ,நரேன், தன்வி ராம், லால், மற்றும் வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் மிக சிறப்பாக நடித்திருக்கும் படம் " 2018". நிஜ சம்பவத்தை அதன் தன்மை மாறாமல் படமாக்குவதில் வல்லவர்கள் மலையாள சினிமா இயக்குனர்கள். இந்த வகையில் இந்த படத்தில் இயற்கையின் கோரத்தாண்டவத்தினை கண்முன் நிறுத்தியுள்ளார் இயக்குனர்.

கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் கேரளாவை உலுக்கி எடுத்தது பேய் மழை மற்றும் வெள்ளம். கேரளாவில் மழை அதிகமாக பெய்யும் காரணமாக அங்கு உள்ள இடுக்கி டேமை திறந்து விடுகின்றார், அதன் பின்னர் நடக்கும் சம்பவங்களை வைத்து முழு திரைப் படத்தினை உருவாக்கிய இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் உள்ளிட்ட படக்குழுவை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். இந்த நிகழ்வின்போது அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வெள்ளத்தில் தத்தளித்தது கேரள மாநிலம். நிலச்சரிவு, உயிரிழப்புகள், இடப்பெயர்வு என பயங்கரமான இயற்கை பேரிடரை சந்தித்த கேரளமாநில நிஜ சம்பவத்துக்கு உயிரும் உணர்வும் கொடுத்து எமோஷனலான ஒரு படத்தை,தந்ததற்காகவே, இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினை பெறுகிறார்.

இந்த திரைப்படம் மலையாள மற்றும் தமிழ் ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றதுடன் திரையரங்குகளில் சிறப்பாக ஓடி நல்ல வசூலை பெற்று தந்துள்ளது . அந்த வகையில் மலையாள திரைப்பட உலகில் முதல் முறையாக உலகெங்கும் சிறப்பாகி ஓடி 200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது 2018. இதன் காரணமாக மலையாள திரை உலகினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!

World Family Doctor Day: கொண்டாடப்பட வேண்டிய ஹீரோக்கள்! 

பெண்களே! உங்கள் முகத்திற்கு ஏற்ற பொட்டு எது?

5 Cool experiments for young science lovers!

உண்டியலின்றி உயர்ந்து நிற்கும் பாலாஜி!

SCROLL FOR NEXT