ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கிய "2018 " என்ற திரைப்படம் கடந்த மே 5ம் தேதி மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இத்திரைப்படம் இன்று தமிழில் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் டோவினோ தாமஸ், அபர்ணா பாலமுரளி, குஞ்சாக்கோ போபன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் பெய்த பெருமழையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. மினிமம் பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் கேரளாவில் நன்றாக ஓடி பெரும் வசூலை பெற்று தந்தது .
2018 திரைப்படம் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை பின்னணியாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது . அதனால் கேரளாவில் 2018 ஆண்டு ஏற்பட்ட மாபெரும் வெள்ள பாதிப்பை கண்முன்னே தத்ரூபமாக காட்டியுள்ளது இந்த திரைப்படம். எங்கும் மழை, வெள்ள நீர்,மனிதர்களின் ஓலம் என படம் பயமுறுத்துகிறது.
முன்னாள் ராணுவ வீரராக டொவினோ தாமஸ் ஆசிரியராக தன்வி ராம் ,மலையாளிகளுக்கு எதிரான எண்ணம் கொண்டவராக தமிழக லாரி டிரைவர் கலையரசன் , போராடும் மாடலாக ஆசிப் அலி மற்றும் அவரது அண்ணனாக நரேன் , தந்தையாக லால் , விவாகரத்து பெற்று வெளிநாடு சென்றவர் வினீத் ஸ்ரீனிவாசன் என தங்கள் பங்களிப்பினை திறன்பட செய்துள்ளனர். நியூஸ் ரிப்போர்ட்டராக அபர்ணா பாலமுரளி மற்றும் ஹெல்ப் லைன் கண்காணிப்பாளாராக குஞ்சாகோ போபன் என அனைவரின் நடிப்புமே சிறப்பாக உள்ளது.
இவர்கள் அனைவரையும் கதையில் ஒண்றிணைத்திருப்பது 2018 கேரளாவில் ஏற்பட்ட மாபெரும் வெள்ள பாதிப்பு நிகழ்வு. இயற்கை சீற்றத்தின் முன் சாமான்ய மனிதர்கள் எதிர்கொள்ளும் துயர சம்ப வங்கள் நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. நடுநடுவே மனித நேயம் , நெகிழ்ச்சி என கலவையான சம்பவங்கள். இயற்கையின் முன் மனிதர்கள் தூசு என்கிற உண்மையை நெஞ்சில் அறைய சொல்கிறது இத்திரைப்படம் . இயற்கை அனுமாஷ்யங்கள் நிறைந்த பயங்கரம் தான் 2018.