வெள்ளித்திரை

2K கிட்ஸின் பிரபல வைரல் யூடுயுபர் TTF.வாசன் கதாநாயகனாக அறிமுகமாகும் “ மஞ்சள் வீரன் “!

தனுஜா ஜெயராமன்

வைரல் யூடுயுபர் TTF வாசன் கதாநாயகனாக அறிமுகமாகும் “ திரைப்படம் மஞ்சள் வீரன் “. இந்த திரைப்படத்தை செல்அம் எழுதி இயக்குகிறார். தி பட்ஜெட் ஃபிலிம்கம்பெனி மற்றும் cosmetologist டாக்டர் கவிதா பிரியதர்ஷினி இணைந்துதயாரிக்கும் படம் “ மஞ்சள் வீரன் “.

அதி வேகமாக பைக் ஓட்டி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு பிரபலமானவர் தான் யூடியூபர் டிடிஎப் வாசன். அவர் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்திவருகிறார். இவருக்கு இலட்சக்கணக்கில் பாலோவர்ஸ் உள்ளனர். யூடியூப்பில் கிடைத்த பிரபலத்தின் மூலம் இவர் தற்போது சினிமாவில் நாயகனாக டிடிஎப் வாசன் முன்னேறி உள்ளார்.

இந்த படத்தில் 2K கிட்ஸின் நிஜ கதாநாயகன் பிரபல வைரல் யூடுயுபர் TT.F.வாசன்கதாநாயகனாக அறிமுகமாகிறார். மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்நடிகைகள் நடிக்க உள்ளனர்.நடிகர் கூல் சுரேஷ் குணசித்திர வேடத்தில் புதிய அவதாரம் எடுக்க உள்ளார்.

இப்படத்தின் ஒளிப்பதிவு கொளஞ்சி குமார் ஏற்றுள்ளார். நடன இயக்குனர் ஸ்ரீதர்மாஸ்டர் நடனம் அமைக்கிறார். ஏனைய கதாநாயகி, மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வுநடைபெற்று வருகிறது. கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் – செல்அம். இவர் ஏற்கனவே திரு.வி.க.பூங்கா என்ற படத்தை இயக்கியவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

அனைத்து வயதினருக்கும் பிடிக்கும் ஜன ரஞ்சகமான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது மஞ்சள் வீரன். ஜூலை மாதம் இறுதியில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. TT.F வாசனின் பிறந்தநாளான நேற்று “ மஞ்சள் வீரன் “ படத்தின் பூஜையும் மற்றும்FRIST LOOK வெளியீடும் நடைபெற்றது.

யூடியூப் மூலம் பிரபலமான டிடிஎப் வாசன் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகும் மஞ்சள் வீரன் திரைப்படத்தின் பூஜையின் போது எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது .

மன அழுத்தம் ஏன் ஏற்படணும்!

Sings Of INFJ: நீங்கள் ஒரு INFJ என்பதற்கான 7 அறிகுறிகள்! 

சிறுகதை - கோடை மழை!

Bottleguard Facemask: சருமத்தை பொலிவாக்கும் சுரைக்காய் ஃபேஸ் மாஸ்க்!

குன்றாமல் - குறையாமல் அள்ளித் தரும் அட்சய திருதியை!

SCROLL FOR NEXT