The Goat Life
The Goat Life 
வெள்ளித்திரை

பிரித்விராஜின் ஆடு ஜீவிதம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜி

ஆடு ஜீவிதம் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தேசிய விருது வாங்கிய ப்ளெஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளியான படம் தான் ஆடு ஜீவிதம். வெகுக்காலமாகவே ப்ரித்விராஜின் படங்கள் அவ்வளவாக வரவேற்பைப் பெறவில்லை. அப்படி வரவேற்பைப் பெற்றாலும் அது மலையாள சினிமாவுடனே நின்றுவிடுகிறது. அதனை உடைத்தெரியும் விதமாக பிரித்வி தனது திறமை மிகுந்த நடிப்பால் சலார் படத்தின் மூலம் மீண்டும் தென்னிந்திய ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியான சலார் படத்தில் பிரபாஸுக்கு ஈடுக் கொடுத்து நடித்து, அந்தக் கதாப்பாத்திரத்தை ரசிகர்களின் மனதில் பதிய வைத்தார் பிரித்வி. அந்தவகையில் பிரித்வியின் அடுத்தப் படமான The Goat Life படத்தின் அறிவிப்பு வெளியான முதலே நல்ல வரவேற்பைபெற்றது.

அதற்கு முக்கிய காரணமே, பிரித்விராஜ் இந்தப் படத்தில் ஒரு வித்தியாசமானத் தோற்றத்தில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும் 2008ம் ஆண்டு மலையாள எழுத்தாளர் பென்யமின் எழுதிய ஆடு ஜீவிதம் கதையின் உண்மைச் சம்பவத்தைத் தழுவி இந்தப் படம் உருவாகிவுள்ளது.

இப்படத்தின் இயக்குனர் தேசிய விருது வாங்கிய ப்ளெஸ்ஸி ஆவார். இவர் 2004ம் ஆண்டு காழ்ச்சா என்றப் படத்தை இயக்கி மலையாள சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்னர் ஒன்பது படங்களை இயக்கினார். அதில் 2005ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான தன்மந்த்ரா படம் தேசிய விருதை வாங்கியது. இது அவரின் இரண்டாவது படமாகும். இதுவரைப் பல விருதுகளை வாங்கிய இவர் தற்போது உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு ஆடு ஜீவிதம் படத்தை இயக்கியுள்ளார்.

மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். வினித் ஸ்ரீனிவாசன், சந்தோஷ் கீழட்டூர், ஜிம்மி ஜீன்-லூய்ஸ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஆடு ஜீவிதம் படத்தை இயக்குனர் ப்ளஸ்ஸி உட்பட ஸ்டீவன் ஆடம்ஸ், ஜிம்மி ஜீன்ஸ் – லூயிஸ் ஆகியோர் இணைந்துத் தயாரித்துள்ளனர். ஆடு ஜீவிதம் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் மார்ச் மாதம் வெளியானது.

ஆடு ஜீவிதம் திரைப்படம் முதல் நாளில் இந்திய பாக்ஸ் ஆபீசில் ரூ.7.60 கோடிக்கும் மேலாக வசூல் செய்து, மிகப்பெரிய தொடக்கத்தை பெற்ற மலையாளப் படத்தில் ஒன்றாக அமைந்துள்ளது. இப்படம் வெளியாகி 9 நாட்களில் ரூ.100 கோடி என்ற இலக்கை எட்டியது. தற்போதுவரை இப்படம் ரூ.157 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்த படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி இப்படம் வருகிற 26-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

ராமபிரான் வழிபட்ட மரகதலிங்கம்!

மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா? ஜாக்கிரதை! 

பெத்லகேம் நேட்டிவிட்டி தேவாலயம்: கிறிஸ்தவத்தின் புனித பிறப்பிடம்!

பட்டாம்பூச்சி அணைப்பின் செய்முறையும் பயன்களும் பற்றி தெரியுமா?

‘பொய்மான் கரடு’ எங்கிருக்கிறது தெரியுமா?

SCROLL FOR NEXT