Thanioruvan part 2 
வெள்ளித்திரை

தனி ஒருவன் 2-ல் வில்லனாகும் பிரபல நடிகர்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

விஜி

ஜெயம் ரவின்யின் தனி ஒருவன் படத்தில் வில்லனாக பிரபல நடிகர் அபிஷேக் பச்சன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு பிரபல இயக்குனரும் நடிகர் ஜெயம்ரவியின் சகோதரருமான மோகன்ராஜ் இயக்கத்தில் வெளியான் படம் தான் தனி ஒருவன். சுமார் 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பெற்ற திரைப்படம் என்ற சாதனையை பெற்றுள்ளது. இந்த படத்தை பிரபல ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த படம் நடிகர் அரவிந்த் சாமிக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் அரவிந்த் சாமி இந்த படத்தில் நடித்திருப்பார். இவரின் இந்த வில்லன் கதாபாத்திரம் தான் படத்தின் முக்கிய அம்சம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு படத்தில் நடிப்பில் மிரட்டியிருப்பார். இதே போன்று தான் நடிகர் ஜெயம்ரவி, நடிகை நயன்தாரா என பலரும் தங்களது நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள்.

Thani Oruvan Part 1 Aravaind Sami

இந்த படத்தின் 2ஆம் பாகம் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த படத்தையும் இயக்குனர் மோகன் ராஜா தான் இயக்குகிறார். பல வருட காத்திருப்புக்கு பிறகு, சில மாதங்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுவது குறித்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலை ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜா ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்டனர்.

இந்நிலையில் இந்த இரண்டாம் பாகத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார்கள் என்பது குறித்த தகவல்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது.

அரவிந்த் சாமி முதல் பாகத்தில் ஒரு அட்டகாசமான பெயரை விட்டு சென்றதால், அந்த அளவிற்கு ஒரு வில்லனை மோகன்ராஜா தேடி வந்தார். தனி ஒருவன் படத்தை பொறுத்தவரை, வில்லன் கதாபாத்திரம் ஹீரோவிற்கு நிகரான கனம் கொண்ட ஒரு கதாபாத்திரம் என்பதால் பல முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக முதலில் நடிகர் மாதவன் அவர்களிடமும் மற்றும் மலையாள நடிகர் பகத் பாசில் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில்,

Actor Abhishek Bachchan

இறுதியாக தற்பொழுது இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு வில்லனாக நடிக்க பாலிவுட் உலகில் சாயின்ஷாவாக இருக்கும் நடிகர் அபிஷேக் பச்சன் தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT